ஆர்யா திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்... விஷால் புகழ்ச்சி
சென்னை : நடிகர் விஷால், ஆர்யா மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ளது எனிமி படம்.
Recommended Video
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இந்தப் படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது.
இதையொட்டி நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

எனிமி படம்
நடிகர்கள் விஷால் -ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனிமி. இந்தப் படம் தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளி பந்தயத்தில் எனிமி படம்
படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அண்ணாத்த படத்துடன் மோதும் தீபாவளி பந்தயத்தில் திரையரங்குகளில் மோதும் ஒரே படமாக எனிமி உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தொடர்ந்து படக்குழு ஈடுபட்டுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஆர்யா குறித்து விஷால்
இதில் விஷால், ஆர்யா, ஆனந்த் சங்கர், தயாரிப்பாளர் வினோத்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விஷால் படம் சிறப்பாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்யா மற்றும் தனக்கு இடையிலான காட்சிகளில் இருவரில் ஒருவருக்கு அடிபட்டுக் கொண்டே இருந்ததாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்யா சிறப்பாக நடிக்கிறார்
மேலும் நடிகர் ஆர்யா தற்போது மிகவும் சிறப்பாக நடித்து வருவதாகவும் அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். திடீரென அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை என்றும் கூறினார். எந்த விஷயத்தையும் சீரியசாக எடுத்துக் கொள்ளாத அவர் தற்போது நடிப்பை சீரியசாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் குறித்து புகழ்ச்சி
மேலும் படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் நினைத்திருந்தால் படத்தை ஓடிடியில் அதிகமான தொகைக்கு விற்றிருக்கலாம். ஆனால் அவர் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்கும் வகையில் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார் விஷால்.

விமர்சனங்களை தள்ளிப் போடுங்கள்
மேலும் படம் எப்படி இருந்தாலும் அதுகுறித்து உடனடியாக விமர்சனங்களை வைக்க வேண்டாம் என்றும் ரசிகர்களை படத்தை எந்தவிதமான எதிர்பார்ப்பும் முடிவும் இல்லாமல் படத்தை பார்க்க விடுங்கள் என்றும் விமர்சகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
மேலும் இயக்குநர் ஆனந்த் சங்கர் குறித்தும் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் ஈகோ இல்லாத மனிதர் என்றும், தன்னுடைய மற்றும் ஆர்யாவின் கேரக்டரை சிறப்பாக அமைத்துள்ளதாகவும் விஷால் மேலும் கூறினார். படத்தின் பாடல்களுக்கு தமன் மற்றும் பின்னணிக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளனர். வினோத்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் அண்ணாத்த படத்திற்கு பிறகு சிறப்பான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











