விஷாலின் லத்தி படத்திற்கு வந்த சிக்கல்… ஓட்டலில் சிக்கிக் கொண்ட படக்குழு… நடந்தது என்ன ?

சென்னை : விஷால் நடித்து லத்தி படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஷாலின் 32வது படமான லத்தியில் முருகானந்தம் என்ற போலீஸ் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக சுனைனா நடிக்கிறார். 2013 ம் ஆண்டு வெளியான சமர் படத்திற்கு பிறகு விஷாலுடன் சுனைனா இணைந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது.

வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும்

நடிகர் விஷால் நடிப்பில் அண்மையில் வெளியானத் திரைப்படம் வீரமே வாகை சூடும். அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா என ஏராளமானோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பிப்ரவரி 4ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

லத்தி

லத்தி

தற்போது விஷால் லத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஷால் நடிக்கும் 32-வது படமாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது. இதில் விஷாலுக்கு நாயகியாக சுனைனா நடிக்கிறார். பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லத்தி படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், இசையமைப்பாளராக சாம் சி.எஸ். பணிபுரிந்து வருகின்றனர்.

கையில் காயம்

கையில் காயம்

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சண்டை காட்சியின் போது விஷாலுக்கு கையில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து ஷூட்டிங் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. இதனால் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள், தங்கி இருந்த ஓட்டலில் இருந்து சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தனர்.

பில் கட்டவில்லை

பில் கட்டவில்லை

ஆனால், ஓட்டல் நிர்வாகம் பில் பாக்கி இருப்பதாக கூறி டெக்னீஷியன்களை வெளியேற அனுமதிக்கவில்லை. பில்லை கட்டினால் தான் வெளியில் விடுவோம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால், டெக்னீஷியன்கள் ஓட்டலிலேயே சிக்கிக் கொண்டனர்.. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு தயாரிப்பாளர் தரப்பில் ஓட்டல் பில் செலுத்தப்பட்டதை அடுத்து டெக்னீஷியன்கள் சென்னை திரும்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X