தூக்கம் இல்லாமல் தொடர்ந்து 48 மணிநேரம் நடித்த விஷால்
சென்னை: அயோக்யா படத்திற்காக விஷால் தொடர்ந்து 48 மணிநேரம் நடித்துள்ளார்.
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் அயோக்யா. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் விஷால் சர்ச்சையில் சிக்கினார்.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் திருப்புமுனை காட்சியை சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோஸில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற செட்டில் படமாக்கினார்கள்.

நீதிமன்ற காட்சிகளை கடந்த 3 நாட்களாக படமாக்கப்பட்டது. இந்த காட்சிகளுக்காக விஷால் தொடர்ந்து 48 மணிநேரம் நடித்துள்ளார். விஷால் தூக்கம் இல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டதை பார்த்து படக்குழு பிரமித்துவிட்டது.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்து வருகிறார். இன்னும் 2 பாடல்கள் மட்டும் ஷூட் செய்ய வேண்டி உள்ளதாம். விஷாலின் அர்ப்பணிப்பு பற்றி தான் சினிமா வட்டாரத்தில் பேச்சாக உள்ளது.
விஷாலுடன் பிரச்சனை என்று பேசப்பட்ட பார்த்திபன் மற்றும் ராதாரவி ஆகியோர் அயோக்யா படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











