சூர்யாவா உடனே சிரித்த விஷால்.. முதன்முதலாக சிக்ஸ் பேக் வைத்தது அந்த நடிகர் தானாம்.. விஷால் சொல்றாரு!
சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் விஷால் 12 வருஷத்துக்கு முன்பாக நடித்த மத கஜ ராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. 50 கோடி ரூபாய் வசூலை அந்த படம் கடந்த நிலையில், அடுத்து விஷால் படம் எப்போது வரும் என்றும் விஷால் மற்றும் சுந்தர். சி மீண்டும் இணைய வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தனர்.
நடிகர் விஷால் மத கஜ ராஜா படத்தின் புரமோஷனுக்காக வந்த போது மைக் பிடித்த அவர் கைகள் நடுங்கிய வீடியோக்கள் வெளியான நிலையில், விஷாலுக்கு உடல்நிலை கோளாறு என ஏகப்பட்ட தகவல்கள் பரவின. ஆனால், அதெல்லாம் கிடையாது என்றும் காய்ச்சல் காரணமாகவே அன்றைக்கு அப்படி இருந்தேன். இப்போ என் கை நடுங்கல, மைக் ஆடல என மத கஜ ராஜா படத்தின் வெற்றி விழாவில் விஷால் பேசினார்.

ஆனால், அதன் பிறகு நடிகர் விஷால் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு கூட வரவில்லையே ஏன் என்கிற கேள்விகளும் அவர் எப்படி இருக்கிறார் என்கிற கேள்விகளும் எழுந்தன. இந்நிலையில், தனது அடுத்த படத்தின் வேலைகளில் பிசியாக உள்ள நடிகர் விஷால் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சமீபத்திய சிக்ஸ் பேக் சர்ச்சை குறித்தும் பேசியுள்ளார்.
முதலில் சிக்ஸ் பேக் வைத்தது என் மகன் தான்: தமிழ் சினிமாவில் எந்தவொரு நடிகரும் செய்யாத ஒரு விஷயத்தை சினிமாவுக்காக என் மகன் செய்தான். சூர்யா தான் சிக்ஸ் பேக் வைத்த முதல் ஆள் என நடிகர் சிவகுமார் சமீபத்தில் நடைபெற்ற ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் பல விவாதங்களையும் கிளப்பின. நடிகர் தனுஷ் தான் முதலில் சிக்ஸ்பேக் வைத்தார் என்றும் நடிகர் விஷால் தான் வைத்தார் என ரசிகர்கள் பல நடிகர்களை குறிப்பிட்டு வருகின்றனர். சூர்யா தான் வைத்தார் என சூர்யா ரசிகர்களும் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
விஷால் பேட்டி: பொங்கலுக்கு மத கஜ ராஜா படம் வெளியாகி வெற்றிப் பெற்ற நிலையில், அதன் பின்னர் மீண்டும் வெளியே தலைக்காட்டாத விஷால் மறுபடியும் வெளியே ஆக்டிவாக வரத் தொடங்கியுள்ளார். அவரது கண்களை பார்த்த ரசிகர்கள் இன்னமும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லையா என்றும் சிகிச்சை எடுத்து வருகிறாரா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விஷால் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

தனுஷ் தான் முதலில் சிக்ஸ்பேக் வைத்தார்: நடிகர் விஷாலிடம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் சூர்யா தான் என சிலர் சொல்கின்றனர். இல்லை இல்லை நடிகர் விஷால் தான் சத்யம் படத்துக்காக வைத்தார் என்கின்றனர். என்கிற கேள்வியை தொகுப்பாளர் கேட்க, சூர்யா என்றதுமே சிரித்துவிட்டு இல்லை என மறுத்த விஷால், முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்து நடித்தது தனுஷ் தான் என்றும் பொல்லாதவன் படத்துக்காக அவர் செய்தார் என்று கூறினார். மேலும், நான் சத்யம் மற்றும் மத கஜ ராஜா படங்களுக்காக அதன் பின்னர் தான் வைத்தேன் என்றார். அந்த காலத்திலேயே நடிகர் அர்ஜுன் சிக்ஸ் பேக் வைத்தார் என்றும் பழைய போட்டோக்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











