ஒரு செகண்ட் விஷாலுக்கு வியர்த்தே போயிடுச்சு.. யாரு அந்த பெண்.. இப்படி தலை தெறிக்க ஓடுறாரே!

சென்னை: நடிகர் விஷால் வெளிநாட்டில் இளம் பெண் ஒருவருடன் கேஷுவலாக நடந்து சென்றதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுப்பதை உஷாராக கவனித்த விஷால் உடனே அங்கிருந்து முகத்தை மூடிக் கொண்டு ஓடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நடிகர் விஷாலுக்கு இந்த ஆண்டு மார்க் ஆண்டனி படம் வெற்றிப் படமாக அமைந்தது. சுமார் 100 கோடி வரை அந்த படம் வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது. அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ரத்னம் எனும் படத்தில் ஆக்ரோஷ இளைஞனாக புரட்சி தளபதி விஷால் தலை எல்லாம் வெட்டி கையில் வைத்துக் கொண்டிருக்கும் போஸ்டரை எல்லாம் வெளியிட்டு இருந்தார்.

Vishal spotted in America with a young girl shocks fans after he ran away to avoid caught on camera

முகத்தை மறைத்த விஷால்: நடிகர் விஷாலுக்கு எப்போ திருமணம் நடைபெறும் என அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட இளம் பெண் ஒருவருடன் சுற்றித் திரிந்து வருகிறார் விஷால்.

Vishal spotted in America with a young girl shocks fans after he ran away to avoid caught on camera

என்ன ஆறடி உயரத்தில் நடந்து செல்வது நம்ம விஷால் மாதிரி தெரிகிறதே என நினைத்த நெட்டிசன் ஒருவர் திடீரென வீடியோ எடுக்க, இவ்ளோ தூரம் வந்து ரகசியமாக ஜாலியாக இருந்தாலும் பயபுள்ளைங்க கேமரா வச்சு புடிச்சிடுறானுங்களே என நினைத்த விஷால் கைப்புள்ள சிக்கிடாதடான்னு முகத்தை மறைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடியுள்ளார்.

Vishal spotted in America with a young girl shocks fans after he ran away to avoid caught on camera

இளம் பெண்ணுடன் ஓட்டம்: ஆனால், அவரது துரதிர்ஷடம் ரசிகர்களின் அதிர்ஷ்டம் அவர் அப்படி ஓடுவதையே வீடியோவாக எடுத்து அந்த நெட்டிசன் சோஷியல் மீடியாவில் வெளியிட தற்போது விஷால் தலை தெறிக்க இளம் பெண் ஒருவருடன் ஓடும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

சமீபத்தில் நடிகர் சிம்பு இளம் பெண் ஒருவருடன் ரெஸ்டாரன்ட்டில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியான நிலையில், அமெரிக்காவில் விஷால் இளம் பெண் ஒருவருடன் ஓடி விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த பெண்ணை தான் விஷால் காதலித்து வருகிறாரா? யார் அந்த பெண் என ரசிகர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக விஷால் ஏதாவது சொல்வாரா என்பதையும் வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X