அந்த வலி விஜய் சேதுபதிக்கு வேண்டாம்… நான் பார்த்துக்கொள்கிறேன்! நடிகர் விஷால்!

96 பட பிரச்சனையில் விஜய் சேதுபதிக்கு உதவ விஷால் முன்வந்துள்ளார்

Recommended Video

96 பட பைனான்ஸ் பிரச்சனை, விஷாலே பொறுப்பேற்கிறார்- வீடியோ

சென்னை: 96 படத்தின் பைனான்ஸ் பிரச்சனையை தானே பார்த்துக்கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி த்ரிஷா நடித்துள்ள 96 திரைப்படம் நேற்று ரிலீஸானது.

பள்ளிக்காதலின் ஞாபகத்தை அசைபோடும் படமாக இருப்பதனால் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தாமதம்

தாமதம்

96 திரைப்படம் சென்னையின் பல திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக நேற்று காலை ஐந்து மணிக்கு திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளரின் டெபாசிட் பிரச்சனையால் ரிலீசாகவில்லை. அதன்பிறகு விஜய் சேதுபதி தலையிட்டதால், 9 மணி காட்சிக்கு ரிலீஸானது.

பைனான்ஸ்

பைனான்ஸ்

தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு விஷால் பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ.1.50 கோடியை ரிலீசின் போது தருவதாக உறுதியளித்திருந்தார். அது தொடர்பான பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததையடுத்து நேற்று காலை 5 மணிக்கு ரிலீசாகவில்லை. விஜய்சேதுபதி அந்த தொகையை தருவதாக உறுதியளித்த பின்னர் பிரச்னை தீர்ந்து ‘96' படம் நேற்று காலை 9 மணிக்கு ரிலீஸானது.

பொறுப்பு

பொறுப்பு

அதன்படி நடிகர் விஜய் சேதுபதி ரூ 1.50 கோடியை பைனான்சியருக்கு கொடுக்க வேண்டும். ஆனால், தற்போது விஜய் சேதுபதி கொடுப்பதாகக் கூறியுள்ள ரூ 1.50 கோடி தொகையை அவருக்கு பதிலாக விஷாலே கொடுப்பதற்கு முன்வந்துள்ளார். பைனான்ஸுக்கு வட்டி கட்டும் வலியை விஜய் சேதுபதிக்கு கொடுக்க விஷால் விரும்பவில்லை என்பதால் இந்த முடிவு என சொல்லப்படுகிறது.

வலி

வலி

விஷால் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளை சந்தித்து வருவதால் அந்தமாதிரி ஒரு வலியை நடிகர் விஜய்சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லையாம். இந்த சம்பவத்துக்கு பிறகு நேற்று இரவு முழுக்க அவர் தூங்காமல் அவதிப்பட்டதாகவும், விஜய்சேதுபதி கொடுப்பதாக கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகைக்கு தானே பொறுப்பேற்பதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல எண்ணம்

நல்ல எண்ணம்

அதன்படி நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ 1.50 கோடியை விஷால் காத்திருந்து அவரிடமே பெற்றுக்கொள்வார் என்றும். அதுவரை ரூ 1.50 கோடிக்கான வட்டியையும் பைனான்சியருக்கு விஷால் செலுத்துவார் எனவும் தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு பைனான்ஸ் பிரச்சனையால் கஷ்டம் வரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால் விஷால் இதை செய்ய முன்வந்துள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X