ஐதராபாத்தில் 40 நாட்கள் முகாமிடும் நடிகர் விஷால் ... என்ன காரணம் தெரியுமா?

சென்னை : நடிகர் விஷாலின் எனிமி படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து வீரமே வாகை சூடும் என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் தற்போது லத்தி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

நடிகர் விஷால்

நடிகர் விஷால்

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் எனிமி என்ற படம் வெளியானது. அண்ணாத்த படத்துடன் தீபாவளி அன்று இந்தப் படம் வெளியானது. இந்த படத்தில் விஷாலுடன் ஆர்யாவும் இணைந்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சிறப்பான எனிமி படம்

சிறப்பான எனிமி படம்

இந்த படம் அண்ணாத்த படத்தின் பிரமாண்டமான வெற்றியின் இடையிலும் சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்று தந்துள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் படம் சிறப்பாக அமைந்திருந்தது.

வீரமே வாகை சூடும் படம்

வீரமே வாகை சூடும் படம்

இதையடுத்து தற்போது வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

லத்தி படம்

லத்தி படம்

இந்த படம் விஷாலின் 32வது படம். இதன் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன. மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதராபாத் செல்ல உள்ளனர்.

40 நாட்கள் படப்பிடிப்பு

40 நாட்கள் படப்பிடிப்பு

அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இந்தப் படம் தயாராகி வருகிறது. படத்தில் விஷாலுக்கு சுனைனா ஜோடியாகி உள்ளார். மேலும் நடிகர் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சாம் சிஎஸ் இசை

சாம் சிஎஸ் இசை

படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். சண்டை இயக்குனராக பீட்டர் ஹெயின் ஒப்பந்தமாகியுள்ளார்.

Recommended Video

Arya -வின் Super HIT சினிமா பயணம் | Naan Kadavul, Raja Rani
சண்டைக்காட்சிகள் ஷூட்டிங்

சண்டைக்காட்சிகள் ஷூட்டிங்

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடக்க உள்ள 40 நாட்கள் படப்பிடிப்பில் விஷால் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X