»   »  விஷால் தந்த பார்ட்டி

விஷால் தந்த பார்ட்டி

Subscribe to Oneindia Tamil

விஷால் நடித்து சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கும்படம் திமிரு.

இந்த படத்தின் பிரத்யேக காட்சி, போர் பிரேமஸ் தியேட்டரில் திரையிடப்பட்டது.இக்காட்சிக்கு விஜய், ஸ்ரீகாந்த் இருவரும் கலந்து கொண்டு படத்தை பார்த்தனர். படம்முடிந்து வெளியே வந்த விஜய், சூப்பரா பண்ணியிருக்கேடா என்று விஷாலைகட்டிப்பிடித்துக் கொண்டார்.

இளைய தளபதியும், வருங்கால இளைய தளபதியுமான (விஷாலை இப்படித்தான்கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள்) விஷாலும், லயோலா கல்லூரியில் சேர்ந்துபடித்தவர்களாம்.

படத்தை பார்த்து முடித்த கையோடு, அம்புட்டு பேரையும் அள்ளிப் போட்டுக்கொண்டு அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு கூப்பிட்டுப் போயிருக்கிறார்விஷால். அங்கே செம விருந்து கொடுத்திருக்கிறார்.

இதில் விஜய், ஸ்ரீகாந்த், பார்ட்டிக்காகவே பிறந்த திரிஷா, ரீமா சென், டைரக்டர் தரணிஉள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதிகாலை 4 மணி வரை விருந்துஅமர்க்களப்பட்டதாம்.

ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டமாக களை கட்டிய விருந்துக்குப் பின்னர் அத்தனைபேரும் களைத்துப் போய் ஆத்துக்குத் திரும்பினார்களாம். அதில் ரொம்பவே களைத்துவிட்ட ரீமா சென்னை பத்திரமாக விஷால் தான் கூட்டிக் கொண்டு ஹோட்டலில்விட்டாராம் (எப்போது திரும்பினார் என்று கேட்கக்கூடாது!)

படம் படு திமிராக வசூலை அள்ளிக் கொண்டிருப்பதால் விஷால் சந்தோஷமாகஉள்ளார். அவரை விட ரவுடி ஈஸ்வரியாக வந்து அசத்திய ஷ்ரேயா ரெட்டிதான்இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளாராம்.

இப்படி ஒருவாய்ப்பு கொடுத்ததற்காக ரொம்ப தேங்ஸண்டி என்று விஷாலையும்,அவருடைய அண்ணனையும் பாராட்டித் தள்ளி விட்டாராம். திமிரு கொடுத்த பிரேக்கால் ஷரேயாவுக்கு பல புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளன.

ஆனால் எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ளாமல், வித்தியாசமான ரோலாக இருந்தால்மட்டுமே ஒத்துக்கொண்டு நடிக்கப்போகிறாராம் ரெட்டி.

ரெட்டி ரொம்ப கெட்டி..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil