சினிமா யார் கைலயும் இல்ல.. உருப்புட்டதா சரித்திரம் இல்ல.. ரெட் ஜெயின்டை விளாசிய விஷால்!
சென்னை: மார்க் ஆண்டனி படத்தை இப்போது வெளியிடக்கூடாது என்று பல பிரச்சனைகள் ஒரு தனிநபரிடம் இருந்து வந்தது. ஒரு படத்தை இப்போது வெளியிடக்கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. சினிமா என் கையில் இருக்கு என்று சொன்ன யாருமே உருப்புட்டதா சரித்திரமே இல்ல. ரெட் ஜெயின்ட் நிறுவனத்தை நடிகர் விஷால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் மூன்றாவது முறையாக கூட்டு சேர்ந்து இருக்கும் திரைப்படம் ரத்னம். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இம்மாதம் 26ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

உருப்புட்டதா சரித்திரமே இல்ல: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஷால், உதயநிதி குறித்து காட்டமாக பேசி உள்ளார். அதில், லத்தி,மார்க் ஆண்டனி படத்தை வெளியிட நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். ஒரு படத்தை இப்போது வெளியிடக்கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. சினிமா என் கையில் இருக்கு என்று சொன்ன யாருமே உருப்புட்டதா சரித்திரமே இல்ல. என் படத்தின் தயாரிப்பாளர்கள் வாங்கிய பணத்திற்காக வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறார்கள், யாரும் சும்மா ஏசியில் உங்காந்து கொண்டு, போனை போட்டு தியேட்டர் வேணும், வேறு எந்த படமும் வரக்கூடாது என்று ஆர்டர் போடும் தயாரிப்பாளர்கள் இல்ல. வட்டிக்கு வாங்கி, வேர்வை சிந்தி, நாங்க எல்லாம் ரத்தம் சிந்தி, கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுத்தா, அந்த படத்தை இப்போ ரிலீஸ் செய்யக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா என்ன நியாயம்.
நீங்க யாரு: என் தயாரிப்பாளர் மார்க் ஆண்டனி படத்திற்காக 65 கோடி செலவு செய்து இருக்கிறார். அவர் செப்டம்பர் 15ந் தேதி படம் வெளியாகும் என அறிவித்துவிட்டார். ஆனால், படத்தை இப்போ வெளியிடக்கூடாது என்று தயாரிப்பாளரிடம் சொல்ல நீங்க யார்? நீயும் படத்தை ரிலீஸ் பண்ணு, நானும் ரிலீஸ் பண்றேன் மக்கள் எந்த படத்தை பார்க்கலாம் என்று அவர்கள் முடிவு பண்ணட்டும். நீங்க மட்டும் படத்தை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் பண்ணி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எதாவது ரூல் இருக்கா.
யாருக்கும் தைரியம் இல்ல: அன்னைக்கு நான் சும்மா இருந்து இருந்தால் மார்க் ஆண்டனி படம் வெளியாகி இருக்காது. அந்த படம் வெளியாகி இயக்குநருக்கும் எனக்கும் ஒரு நல்ல பெயர் கிடைத்து இருக்கு. இப்பவம் சொல்கிறேன் ரத்னம் படத்திற்கும் பிரச்சனை வரும்,வேண்டும் என்றே ஒரு வேட்டுவைப்பார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும் இதை தைரியமாக வெளியில் சொல்ல யாருக்கும் தைரியம் கிடையாது என்று விஷல் அந்த பேட்டியில் உதயநிதியை ரெட் ஜெயண்ட் வன்மையாக கண்டித்துள்ளார்.
உறவில் விரிசல்: உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஷால் இருவருமே கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். ஆனால் தற்போது இருவருக்கும் இடையே மெல்ல மெல்ல நட்பு உடைந்து அது ஈகோ யுத்தமாக மாறி உள்ளது. விஷாலின் லத்தி படத்தை உதயநிதியிடம் கேட்டு கொண்டதற்காக ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தமிழகத்தில் விநியோகம் செய்தது. படம் எதிர் பார்த்த வெற்றியை தராத காரணத்திற்காக லத்தி திரைப்படத்தின் சாட்டி லைட் உரிமை தொகை உதயநிதி தரப்பு குறைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்தில் இருந்த விஷால் உதயநிதி இடையே மெல்ல உரசல் தொடங்கி தற்போது அது பூதாகரமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











