விஷாலின் முகத்தில் மீண்டும் வீக்கம்?.. தொடரும் கை நடுக்கம்.. இப்போ எந்த ஃபீவர் அட்டாக்?
சென்னை: உழைப்பாளர்கள் தினத்தையொட்டி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஷால் இயக்குநர் ஆர்.கே.செல்மணியை புகழ்ந்து பேசினார். மேலும் நான் வியந்து மதிக்கும் தலைவர் யார் என்பதையும் வெளிப்படையாக மேடையில் பேசினார். அப்போது தொழிலாளர்கள் கைதைட்டி உற்சாகப்படுத்தினர்.
ஃபெப்சி அமைப்பின் சார்பில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் மே தின விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகை ரோஜா, விஷால், ராதாரவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது பேசிய ஃபெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி ஸ்டார் நடிகர்களை நேரடியாக தாக்கி பேசியிருந்தார். இதிலும், உண்மையான எஜமானர்கள் நடிகர்கள் தான் என்றும் வெளிப்படையாக பேசியது சர்ச்சையானது. மேலும் ராதாரவியும் தொழிலாளர்கள் நலன் காக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

80 சதவீத வருமானம் நடிகர்களுக்கு: ஃபெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி விழாவில் பேசியதாவது, "ஒரு படம் ரிலீஸ் ஆனால் 80 % வருமானம் நடிகர்களுக்குதான். 10 சதவீதம் இயக்குநர்களுக்கு, மீதம் இருக்கக்கூடிய 10 சதவீதம் தான் தொழிலாளர்களுக்கு போய் சேர்கிறது. உண்மையான எஜமானர்கள் நடிகர்கள் தான். தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ஒற்றுமையாக இல்லாமல் எங்களை பிரிக்க பார்க்கிறார்கள். சூட்டிங்கிற்கு வந்தோம், மேக்கப் போட்டோம், சென்றோம் என நடிகர்கள் இருந்து விடக்கூடாது. திரைப்பட தொழிலாளர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 5% மட்டுமே சம்பளம் தரப்படுகிறது. படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. வாழ்வாதார பிரச்னையில் தொழிலாளர்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, பெரிய நடிகர்கள் அமைதி காப்பது நியாயமா? என கடுமையாக சாடி பேசியிருந்தார்.
எனக்கு பிடித்த தலைவர்: அதன் பின்னர் பேசிய நடிகர் விஷால், இங்கே இருக்கும் கிராப்ட் தெய்வங்களுக்கு வணக்கம் என விஷால் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் நான் சினிமாவில் விஜயகாந்த் அண்ணனிடம் இருந்து கற்றுக்காெண்ட விசயம் 2 இருக்கிறது. எனது அலுவலகத்திற்கு யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிரம்பி போக வேண்டும். பட்டினியோடு வருபவர்களுக்கு சோறு போடும் பணியை செய்து வருகிறேன். அதேபோன்று எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ஆர்.கே.செல்வமணி. நான் ஒரு சங்கம் நடத்துவதே கஷ்டமாக இருக்கிறது. இந்த மனுஷன் 24 சங்கத்திற்கு தலைவராக இருக்கிறார். உண்மையில் பாராட்ட வேண்டும். இந்த மேடைக்காக கூறவில்லை. உண்மையில் ஆர்.கே.செல்வமணி சாருக்கு சிலை வைக்க வேண்டும். இதில் குற்ற்ச்சாட்டு, சண்டையும் வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன் என விஷால் தெரிவித்தார்.

9 வருடம் ஆகிடுச்சு: மேலும் பேசிய விஷால், என்னை பொறுத்தவரைக்கும் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்த தலைவர் என்றால் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி சார் தான். அடுத்த ஃபெப்சி சங்க மீட்டிங் நடிகர் சங்கம் கட்டடத்தில் நடக்க வேண்டும் என்பது எனது ஆசை. இன்னும் 4 மாதத்தில் நடிகர் சங்க கட்டடம் வந்து விடும். நானும் தப்பி தவறி ஒரு வார்த்தை விட்டேன். நடிகர் சங்க கட்டடம் வந்த பிறகு திருமணம் செய்துகொள்வேன் என கூறினேன். ஆனால், 9 வருஷம் ஆகும் என்று நினைக்கவில்லை என சிரித்தபடியே விஷால் தெரிவித்தார். சினிமாவிற்கு தூண்கள் நீங்கள் தான் என ஃபெப்சி உறுப்பினர்களை கை நீட்டி பேசினார். நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை என விஷால் கூறினார்.
உடல் நலம் பாதிப்பு: மதகஜராஜா படம் வெளியான நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷாலுக்கு திடீரென காய்ச்சலால் கை நடுக்கத்துடன் பேசியிருந்தார். அதுகுறித்த செய்திகளும் சர்ச்சைகளும் பூதாகரமாக வெடித்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் இப்போ கை நடுங்கவில்லை பார்த்தீர்களா என கூறினார். தற்போது ஃபெப்சி சங்க விழாவில் பேசிய விஷால் மிகவும் கை நடுக்கத்துடனும், வார்த்தைகளை முன்னும் பின்னும் உளறியபடி பேசினார். மேலும் கையை நீட்டி பேசிய விஷாலின் கை விரல் ஆட்டம் குறையாமல் இருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் விஷாலுக்கு காய்ச்சல் வந்துவிட்டதா என கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். மேலும், அவரது முகத்தில் மாற்றம் இருப்பதாகவும் இது பழைய விஷால் இல்லை. உண்மையில் விஷாலுக்கு என்ன பிரச்னை என கேட்க தொடங்கிவி்ட்டனர். ஃபெப்சி சங்க விழாவில் பேசிய போது விஷாலின் முகமும் பேச்சிலும் மாற்றம் இருப்பதாக கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











