நான் இனி அப்படித்தான் பேசுவேன்.. உலகம் முழுவதும் வைரல்.. விஷால் எடுத்திருக்கும் அதிரடி முடிவு

சென்னை: அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்த விஷால்; சில சூழ்நிலைகளால் நடிகராக மாறினார். செல்லமே படம் ஹிட்டாகி தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்துவந்த அவர் இடையில் வரிசையாக தோல்வியை சந்தித்தார். அவருக்கு பல வருடங்களுக்கு பிறகு மார்க் ஆண்டனி, மத கஜ ராஜா ஆகிய திரைப்படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அடுத்ததாக துப்பறிவாளன் 2 பட வேலைகளில் பிஸியாக இருக்கும் அவர்; சமீபத்தி ஒரு நிகழ்ச்சியில் பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது.

இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையோடு சினிமாவுக்குள் வந்தவர் விஷால். அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் செல்லமே படத்தில் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் தொடர்ந்து நடிகராக பயணப்பட முடிவு செய்தார். அதன்படி அவர் நடித்த திமிரு, சண்டக்கோழி, தாமிரபரணி, மலைக்கோட்டை என வரிசையாக ஹிட் படங்களில் வைத்தார். முக்கியமாக கோலிவுட்டின் பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வருவார் என்றும் பலர் விஷாலுக்கு ஆரூடம் கூறினார்கள். அவரும் அதுமாதிரியான கதைகளைத்தான் தேர்ந்தெடுத்து நடித்தார்.

தோல்வி முகத்தில் விஷால்: அப்படி அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் தோல்வியைத்தான் சந்தித்தன. அதிலும் பாலா இயக்கத்தில் நடித்த அவன் இவன் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் அவர். ஆனால் அந்தப் படமும் பலத்த அடியை வாங்கியது. அப்படிப்பட்ட சூழலில் சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு திரைப்படம் வெளியாகி அவருக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியிலேயே சிக்கின.

Vishal s Latest Speech Goes Trending on Social Media

பல வருடங்கள் கழித்து ஹிட்: நிலைமை இப்படி இருக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார் அவர். டைம் டிராவல் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதனால் பல வருடங்கள் கழித்து அவருக்கு ஒரு ஹிட் கிடைத்தது. அந்த வைபோடு அவர் அடுத்து நடித்த ரத்னம் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக சுந்தர். சி இயக்கியிருந்த மத கஜ ராஜா இந்த வருட பொங்கலுக்கு வெளியானது.

புது நம்பிக்கை தந்த MGR: அந்தப் படத்தை 13 வருடங்களுக்கு முன்னரே சுந்தர் இயக்கி முடித்துவிட்டார். சில காரணங்களால் இத்தனை வருடங்கள் கழித்து வெளியானது. இப்போதைய ஆடியன்ஸோடு படம் கனெக்ட் ஆகுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் ஆச்சரியம் கொடுக்கும் விதமாக படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இத்தனை வருடங்கள் கழித்து வெளியாகி மத கஜ ராஜா ஹிட்டாகியிருப்பதால் தாமதமாக ரிலீஸ் செய்தாலும் கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும் என்ற நம்பிக்கையும் கோலிவுட்டில் பிறந்திருக்கிறது.

ட்ரெண்டான விஷால்: இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் விஷால் ட்ரெண்டானார்.அதாவஹ்டு அந்த ஈவென்ட்டுக்கு வந்த அவர் கைகள் நடுங்கியபடி மைக்கை பிடித்து பேசினார். இதனையடுத்து அவருக்கு ஏதோ உடல்நலத்தில் பிரச்னை என்று பேசப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே நார்மல் ஆன விஷால்; அன்றைய தினம் எனக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தது. அதனால்தான் அப்படி இருந்தேன் என்று விளக்கமளித்திருந்தார்.

விஷாலின் பேச்சு: இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "ஒரே ஒரு நாள் மட்டும்தான் எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. அதே நாளில்தான் அந்த வீடியோவும் உலகம் முழுவதும் ட்ரெண்டானது. காய்ச்சல் அனுபவம் ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல் உலகம் முழுவதும் என்னுடைய பெயரை வைரலாக்கியது. ரசிகர்களின் அன்பையும் புரிந்துகொள்ள வைத்தது. அன்று நான் கொஞ்சம் நடுங்கியபடி பேசினேன். அதனால்தான் அது வைரலானது. எனவே இனி நான் எங்கு பேச ஆரம்பித்தாலும் அப்படித்தான் பேசப்போகிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X