சிபிஐ அலுவலகத்தில் விஷால்.. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என ட்வீட்!

சென்னை: மார்க் ஆண்டனி இந்தி வெர்ஷனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வழக்கில் சிபிஐ அதிகாரிகள் முன் அஜரான விஷால், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்று ட்வீட் போட்டுள்ளார்.

ஆதிக் ரவிச்சத்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே ஆர்யா, அபிநயா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியானது.

Vishals tweet about his appearance at the CBI office

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழியில் வெளியான இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரி குவித்தது.

மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் படமாக வெளியான மார்க் ஆண்டனி, சூப்பர் ஹிட் அடித்து வசூலை வாரிக்குவித்தது. விஷாலுடன் எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

லஞ்சம் கேட்ட தணிக்கைக்குழு: மார்க் ஆண்டனி படத்தின் இந்தி வெர்ஷன் சென்சாருக்காக, மும்பை CBFC அலுவலகத்தில் 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். சென்சார் வாங்க மீடியேட்டராக இருந்த மேனகா என்பவருக்கு பணம் கொடுப்பதைத் தவிர அப்போது வேறு வழியில்லை எனவும் அவர் அந்த வீடியோவில் பேசியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் மகாராஷ்ட்ரா முதலமைச்சரும் பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஊழலுக்கு எதிராக குரல்: இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஷால் மற்றும் அவரின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் மும்பையில் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி விளக்கம் அளித்தார் இதுகுறித்து, விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், சிபிஎஃப்சி வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நான் சென்றிருந்தேன். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

மேலும் விசாரணை நடத்தப்படும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் இந்த அரசு அலுவலகத்திற்கு செல்வேன் என்று என் வாழ்நாளில் நினைத்ததில்லை. ரீல் வாழ்க்கையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன் எனபதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X