twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரட்டை அர்த்த வசனங்களை தவிர்க்கிறேன்: தவறுக்கு சினிமா காரணமாக இருக்கக் கூடாது- விஷ்ணு விஷால்

    |

    சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் ராட்சசன் திரைப்படம் குறித்த பல விஷங்களை பகிர்ந்துள்ளார்.

    விஷ்ணு விஷால், அமலா பால், ராதாரவி, காளி வெங்கட், ராம்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ராட்சசன். இத்திரைப்படத்தை முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமார் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அக்டோபர் 5 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. சைக்கோ த்ரில்லராக தயாராகியுள்ள இப்படத்தில் புலன் விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

    ராம்குமார்

    ராம்குமார்

    முதலில் இந்த கதையைச் சொன்ன ராம்குமார், அதில் வரும் போலீஸ் அதிகாரிக்கு நாற்பது வயது என சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்ட விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்துப் போனதால், சில மாற்றங்கள் செய்தால் அவரே நடிக்கலாம் என முடிவெடுத்து ராமிடம் சொல்ல, பிறகு கதையில் போலீஸ் அதிகாரியின் வயதைக் குறைத்துள்ளனர்.

    சைக்கோ

    சைக்கோ

    இப்படத்தில் வரும் போலீஸ் அதிகாரி மற்ற படங்களில் வந்த அதிகாரி போல் இருக்கமாட்டார். சாதாரண உடல் வாகுடன் காட்சியளிக்கும் போலீஸ் தான். அவர் எப்படி சைக்கோ கொலைகாரனை தேடிப் பிடிக்கிறார் என்பது தான் கதை. சைக்கோ த்ரில்லர் படமாக இருந்தாலும், இப்படம் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம். ஆனால் பயமுறுத்தும் காட்சிகள் படத்தில் இருக்கும். இப்படத்திற்காக ஷார்ட்டாக முடி வெட்டிக் கொண்டு நடித்துள்ளேன். மேலும், சைக்கோ கொலைகள் சம்பந்தப்பட்ட செய்திகளை படித்து அதை எதிர்கொள்ளும் வகையில் தயாரானேன் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

    சிறப்பு

    சிறப்பு

    இப்படத்தின் கதாநாயகியான அமலாபால் ஆசிரியையாக நடித்திருக்கிறார். டப்பிங் முடிந்த பிறகு அவர் நடித்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என அமலாபால் குறிப்பிட்டதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

    தவிர்க்கிறேன்

    தவிர்க்கிறேன்

    பொதுவாக ஆபாச வசனங்கள் அவருடைய திரைப்படங்களில் இல்லாமல் பார்த்துக்கொள்வதாகவும், அவருடைய படங்களில் நடிக்கும் மற்ற நடிகர்களையும் அதை தவர்க்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார். சினிமாவின் மூலம் சமுதாயத்தில் தவறுகள் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    Actor Vishnu vishal says, that he is not encouraging double meaning jokes in his movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X