மிரட்டல் லுக்கில் விஷ்ணு விஷால்.. இன்னமும் எப்படி மெயின்டெயின் பண்றீங்க என வியக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் தனது மிரட்டலான சிக்ஸ்பேக் லுக்கை வெளியிட்டு இருக்கிறார்.
ஜனவரி மாதம் தனது சிக்ஸ் பேக் லுக்கை வெளியிட்டு, தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடந்து வந்த சுக துக்கங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்.
எஃப்.ஐ.ஆர்., காடன் படங்களை தொடர்ந்து அடுத்ததாக தான் நடிக்க உள்ள மோகன்தாஸ் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டு வைரலாக்கினார்.

விவாகரத்து
கடந்த 2011ம் ஆண்டு நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்ட விஷ்ணு விஷாலுக்கு கடந்த 2017ம் ஆண்டு ஆர்யான் என்ற மகன் பிறந்தார். ஆனால், மனதளவில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்துக் கொண்டார் விஷ்ணு விஷால்.

வெற்றியை கொண்டாட முடியவில்லை
ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுத் தந்தது. அந்த படத்திற்கு பிறகு வாழ்க்கை வேற லெவலில் மாறும் என நினைத்திருந்த அவருக்கு, குடும்ப பிரச்சனைகள் காரணமாக வாழ்க்கை முழுவதுமாக இருண்டு போனது.

மாற்றம் தந்த உடற்பயிற்சி
உடலையும், மனதையும் மாற்ற வேண்டும் என்று நினைத்து, ஜிம்மில் சேர்ந்த விஷ்ணு விஷாலுக்கு நல்ல பலன் கிடைக்கவே செய்தது. ஆறு மாதத்தில் மனதையும் உடலையும் கட்டுக் கோப்பாக வளப்படுத்தினார் நடிகர் விஷால். கடந்த ஜனவரி மாதம் புது மனிதனாக தான் மாறிவிட்டேன், இந்த ஆண்டு சிறப்பாக இருக்கப் போகிறது என சிக்ஸ்பேக் வீடியோவை வெளியிட்டு பேசி இருந்தார்.

புது வில்லன்
மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், தற்போது விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் விழுந்து கிடக்கிறார் விஷ்ணு விஷால். காடன், எஃப்.ஐ.ஆர், படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கும் அவர், அடுத்ததாக மோகன் தாஸ் படத்தையும் தொடங்க ஆயத்தமாகி உள்ளார். ஆனால், இந்த லாக்டவுன் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய வில்லனாக மாறி இருக்கிறது.

மிரட்டல் லுக்
தனது சிக்ஸ்பேக் தோற்றத்தை வெளிக்காட்டி 5 மாதங்கள் ஆன நிலையில், தற்போது மீண்டும் மிரட்டல் லுக்கில் மேலாடை ஏதும் அணியாமல் தனது சிக்ஸ் பேக் உடலை காட்டியபடி போஸ் கொடுத்திருக்கிறார் விஷ்ணு விஷால். மனம், உடல், பழக்க வழக்கங்கள் இதனை எப்போதுமே சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேப்ஷன் போட்டுள்ளார்.

39 வருஷம்
சில நாட்களுக்கு முன்னதாக, தனது அப்பா - அம்மாவின் திருமண நாளை முன்னிட்டு அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். 39 வருடங்களாக ஒன்றாக இணைந்து வாழும் அவர்களை பார்த்து சந்தோஷப்பட்டு போஸ்ட் போட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த நடிகை ஆர்த்தி அம்மாவுக்கு மட்டும் தான் முத்தமா என்றும் கலாய்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











