விஜய் செய்தது அவ்வளவு பாசிட்டிவ்.. ஓபனாக சொன்ன விஷ்ணு விஷால்.. செம பாராட்டு

சென்னை: இன்று சர்வதே போதை பொருள் எதிர்ப்பு நாள் ஆகும். இதன் காரணமாக இன்று Start Run.. Stop Drugs என்ற பெயரில் மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்து முதலமைச்சர் விஜய்யும் ஓடினார். அது பலரிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படி ஒரு முதலமைச்சரை பார்த்ததே இல்லை என்று தவெகவினர் புளங்காங்கிதம் அடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் மாரத்தான் குறித்து விஷ்ணு விஷால் பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று சர்வதேச போதை பொருளுக்கு எதிரான நாளையொட்டி சென்னையில் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் அவர், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன் உள்ளிட்ட பலர் அந்த மாரத்தானில் ஓடினார்கள். விஜய் மட்டும் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டரை கவர் செய்தார் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.

Vishnu Vishal Praises Tamil Nadu CM Vijay s 3 KM Anti-Drug Marathon Run
Photo Credit:

இவர்தான் ஃபர்ஸ்ட்டா?: அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே மூன்று கிலோமீட்டர் மாரத்தான் ஓடிய முதல் முதலமைச்சர் விஜய்தான் என்று புகழ்ந்தார். ஆனால் அதை அனைவருமே ட்ரோல் செய்துவருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா 21 கிமீ மாரத்தான் ஓடியதை எந்த கணக்கில் சேர்ப்பது என்று பதிலடியும் கொடுத்துவருகிறார்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு முதலமைச்சர் இப்படி செய்வதை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

Also Read
காலையிலேயே சாலையில் இறங்கிய விஜய்.. போதை பொருளுக்கு எதிராக மாரத்தான் ஓட்டம்..சி.எம் கலக்குறாரு
காலையிலேயே சாலையில் இறங்கிய விஜய்.. போதை பொருளுக்கு எதிராக மாரத்தான் ஓட்டம்..சி.எம் கலக்குறாரு

விஷ்ணு விஷால் பேட்டி: இந்நிலையில் இந்த மாரத்தான் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் இன்று அளித்த பேட்டியில், "இன்று காலையில் நான் அந்த ரன்னை பார்த்தேன். விஜய் மூன்று கிலோமீட்டர் ஓடியதை பார்க்கும்போது நன்றாக இருந்தது. இது ஒரு சிக்னல். 50 வயதுக்கு மேல் இருக்கும் நம்முடைய முதலமைச்சர் மூன்று கிமீ ஓடும்போது, ஹெல்த்தை ஒரு உதாரணமாக செட் செய்து அவர் ஓடும்போது ரொம்ப பாசிட்டிவ்வாக இருந்தது.

ஆதவ் பேசியது: ஆதவ் அர்ஜுனா காலையில் பேசும்போது, 'இப்படி ஒரு முதலமைச்சரை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா என கேட்டார். அது நன்றாக இருந்தது. ஒரு முதலமைச்சர் ஓடும்போது உடல்நலத்தின் முக்கியத்துவம் என்ன? ட்ரக்ஸுக்கு நோ சொல்லுங்கள் என்பதெல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் இன்னும் நடக்கும் என நம்புகிறேன். ஏனெனில் மக்கள் அவரை செலக்ட் செய்திருக்கிறோம். சினிமாவுக்கும் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன" என்றார்.

கட்டா குஸ்தி 2: முன்னதாக, விஷ்ணு விஷால் இப்போது கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதிலும் ஐஸ்வர்யா லட்சுமியே ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜூலை மூன்றாம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இதன் முதல் பாகம் எப்படி பெரிய ஹிட்டடித்ததோ அதே போல் இந்தப் படமும் செம ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X