மனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்
Recommended Video

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை முறைப்படி விவாகரத்து செய்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷாலும் நடிகர் நட்ராஜின் மகளான ரஜினியும் கல்லூரியில் சந்தித்து காதலில் விழுந்தனர். ஜூனியரான ரஜினியை 4 ஆண்டுகள் காதலித்தார் விஷ்ணு விஷால்.
பின்னர் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி அவர்களின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆர்யன் என்ற மகன் பிறந்தார்.

விவாகரத்து
விஷ்ணு விஷாலுக்கும், ரஜினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து முறைப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினர். தற்போது அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து விஷ்ணு விஷால் ட்விட்டரில் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஷ்ணு விஷால்
ஓராண்டு காலமாக பிரிந்திருந்த நானும், ரஜினியும் தற்போது சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டோம். எங்களுக்கு அழகான மகன் உள்ளார். அவருக்கு நாங்கள் நல்ல பெற்றோராக இருப்போம். நாங்கள் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.
ரசிகர்கள்
விஷ்ணு விஷால் வாழ்வில் நடந்தது பற்றி அறிந்து அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரஜினி
இன்னும் ஒரு வருஷம் காத்திருந்திருக்கலாமே, மனசு மாரி இருக்குமே.. ஏங்க விவாகரத்து வரை போறீங்க என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











