“எஃப்.ஐ.ஆர்“ ஓடிடியில் ரிலீசா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால் !
சென்னை : எஃப். ஐ.ஆர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக பரவி வரும் வதந்திக்கு நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இப்படத்தில ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன் மற்றும் ரைசா வில்சன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில் அஷ்வத் இசையமைத்துள்ளார்.

புதிய கேரக்டரில்
விஷ்ணு விஷாலின் எதார்த்தமான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் எஃப் ஐ ஆர். இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான முக்கியத்துவம் பெறுவதால், ஒவ்வொரு நடிகரும் இதுவரை தாங்கள் நடித்திராத வித்தியாசமான, புதிய கேரக்டர்களில் வலம் வந்து மக்கள் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

அதிரடி திகில் படம்
சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூற முடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதை உணர்வுபூர்வமான காட்சி அமைப்புகளுடன் இந்த அதிரடி-திகில் படம், நடப்பிலிருக்கும் இன்றைய காலச் சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், அனைத்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

ஓடிடி ரிலீஸ்?
எஃப்.ஐ.ஆர் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடந்தது. இதனை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் கைப்பற்றிவிட்டதாகவும் செய்திகள் பரவின. இந்த செய்தி ஒரு புறம் எதிர்பார்ர்ப்பை ஏற்படுத்தினாலும், சில ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

தவறான செய்தி
இந்நிலையில், விஸ்ணு விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில், F.I.R திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் என்பது தவறான செய்தி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்... நான் எப்போதும் சொல்வது போல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் F.I.R படத்தை திரையரங்குகளில் வெளியிட என்னால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறேன்... திரையரங்குகளில் ரசித்து காண்பதற்காகவே இப்படத்தை தயாரித்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

மோகன் தாஸ்
நடிகர் விஷ்ணு அடுத்தாக மோகன் தாஸ் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications