காதல் பற்றி ஓயாமல் கிசுகிசுக்கும் நெட்டிசன்ஸ்: சூசகமாக ட்வீட் போட்ட விஷ்ணு விஷால்

By Siva

Recommended Video

Vishnu Vishal | Jwala Gutta | இதுதானா விஷ்ணு விஷால் மனைவியை பிரிந்தர்க்கான காரணம்- வீடியோ

சென்னை: அனைவரும் தனது இரண்டாவது திருமணம் பற்றி சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருப்பதை பார்த்த நடிகர் விஷ்ணு விஷால் சூசகமாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

காதல் மனைவி ரஜினி நட்ராஜை பிரிந்த நடிகர் விஷ்ணு விஷாலின் முழுக் கவனமும் படங்கள் மீது தான் உள்ளது. இந்நிலையில் அவர் தனது தோழியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜுவாலா கட்டாவுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபிக்களை ட்விட்டரில் வெளியிட்டார்.

அதில் இருந்து விஷ்ணு விஷால், ஜுவாலா பற்றி தான் நெட்டிசன்கள் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விஷ்ணு

தான் வெளியிட்ட செல்ஃபிக்களால் ஆளாளுக்கு தன்னை பற்றி பேசுவதை பார்த்த விஷ்ணு விஷால் முதலில் அமைதியாக இருந்தார். அவரின் மௌனம் சம்மதம் என்பது போன்று பேசப்பட்டது. இதையடுத்து அவர் சூசமாக ஒரு ட்வீட் போட்டுள்ளார். தன் வாழ்க்கை, கடந்த காலம், கேரக்டர் ஆகியவற்றை பற்றி ஒரு முடிவுக்கு வரும் முன்பு தான் கடந்து வந்த பாதை, கவலை, சந்தேகங்கள், பயம், வலி, சந்தோஷம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் விஷ்ணு விஷால்.

ஜுவாலா

ஜுவாலா

ஜுவாலா கட்டாவை எனக்கு பிடிக்கும், அவருக்கும் என்னை பிடிக்கும் என்று விஷ்ணு விஷால் பிரபல ஆங்கில நாளிதழிடம் தெரிவித்தார். அவர் சும்மா பிடிக்கும் என்று கூறியதையே ஏதோ ஜுவாலாவை நாளைக்கே திருமணம் செய்யப் போகிறார் என்பது போன்று சமூக வலைதளங்களில் பேசத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் விஷ்ணு விஷால் போட்ட ட்வீட் நியாயம் தான். அவர் வாழ்க்கை, அவர் இஷ்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

விஷ்ணு விஷாலின் ட்வீட்டை பார்த்து அவருக்கு ஆதரவும் கிடைத்துள்ளது, எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. நீங்கள் ஒரு நடிகர், ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக அன்பு வைத்துள்ளதால் உங்கள் முன்னாள் மனைவி, மகன் மீதும் பாசம் வைத்திருக்கிறார்கள். அது தவறா என்று சிலர் கேட்டுள்ளனர். உண்மையை சொல்லுங்க, ஜுவாலாவுக்காக தானே ரஜினியை பிரிந்தீர்கள் என்று சில குசும்புக்காரர்கள் கேட்டுள்ளனர். சிலரோ, ப்ரோ அடுத்தவர்களுக்காக வாழ முடியாது. நீங்கள் நீங்களாக மட்டும் இருங்க. அது போதும் என்று ஊக்கமளித்துள்ளனர்.

படம்

படம்

விஷ்ணு விஷால் ப்ரோ உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யார் என்ன பேசினாலும் கண்டுகொள்ளாதீர்கள். இன்று நீங்கள், நாளை வேறு யாராவது ஒருவரை பற்றி பேசுவார்கள். அதனால் நீங்கள் படங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு நெகட்டிவிட்டி வேண்டாம் என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X