மனைவியை பிரிந்தது ஏன்?: மனம் திறந்த விஷ்ணு விஷால்
சென்னை: தனது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
நடிகர் விஷ்ணு விஷால் ரஜினி நட்ராஜை காதலித்து கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். தானும், ரஜினியும் பிரிந்துவிட்டதாக விஷ்ணு விஷால் ட்விட்டரில் தெரிவித்தபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் விவாகரத்து குறித்து விஷ்ணு விஷால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

விஷ்ணு
எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. வாழ்க்கையில் எதுவும் நிலை இல்லை என்பதை புரிந்து கொண்டுள்ளேன். என் வாழ்வில் பக்காவான விஷயம் என்றால் அது என் திருமணம் என்று நினைத்தேன். ஆனால் அது நிலைக்காமல் போய்விட்டது.

பேச்சு
நான் முன்பெல்லாம் யாருடனும் அவ்வளவாக பேச மாட்டேன். தன்னம்பிக்கை குறைவாக இருந்தது. சினிமா துறையில் இருந்து கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பதால் பட வாய்ப்புகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நான் மெல்ல மெல்ல அனைவரிடமும் பேசத் துவங்கினேன்.

படங்கள்
திரையில் ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகைகளுடன் நன்றாக பேசினேன். அங்கு தான் பிரச்சனை ஆரம்பித்தது. நீ முன்பு போன்று இல்லை, மாறிவிட்டாய். நான் திருமணம் செய்தவர் நீ இல்லை என்று பிரச்சனை துவங்கியது.

மனைவி
நான் மாறிய பிறகு நாங்கள் பிரிந்துவிட்டோம். யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நான் ரஜினியை பிரிந்தாலும் அவருடன் நட்பாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். விஷ்ணு, ரஜினி தம்பதிக்கு ஆர்யன் என்கிற மகன் உள்ளார்.


Click it and Unblock the Notifications











