Vishnu Vishal - முதல் மனைவி அப்படிப்பட்டவர்.. ரஜினி அதை யோசிக்கவே இல்லை.. மனம் திறந்த விஷ்ணு விஷால்

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி வெளியான அந்தப் படம் டீசண்ட்டான வரவேற்பை பெற்றிருக்கிறது. கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் லீடு ரோலில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் தனது முதல் மனைவி குறித்து விஷ்ணு விஷால் பல காலம் கழித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு மூலம் நடிகராக அறிமுகமானார் விஷ்ணு விஷால். முதல் படம் மெகா ஹிட்டானது. படம் ஹிட்டானது மட்டுமின்றி விஷ்ணு விஷால் நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார். அதற்கு அடுத்ததாக பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக்கூட்டம், இன்று நேற்று நாளை , நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவர் நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வெளியானது. இதனால் அவரது கதை தேர்வு அபாரமாக இருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு எழுந்தது. குறிப்பாக சீனு ராமசாமி இயக்கிய் நீர்ப்பறவை படத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பை பாராட்டதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இருப்பினும் மனம் தளராத விஷ்ணு விஷால் தனது கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

Vishnu Vishal Talks about his Marriage Life

இன்று நேற்று நாளை: பெரும் திருப்புமுனைக்காக காத்திருந்த அவருக்கு முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை படங்கள் அமைந்தன. இரண்டு படங்களும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து உற்சாகம் கூடிய விஷ்ணு விஷால் ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு என வித்தியாச வித்தியாசமாக நடித்தார்.

ராட்சசன்: விஷ்ணு விஷாலின் கரியரிலேயே முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது ராட்சசன். முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார் இயக்கியிருந்த அந்தப் படம் த்ரில்லர் ஜானரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அவரது மேக்கிங்கும், விஷ்ணு விஷாலின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து ராட்சசன் 2வை கொடுக்கப்போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது.

லால் சலாம்: அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் அந்தப் படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸானது. விஷ்ணு விஷாலுடன் இணைந்து விக்ராந்த் லீடு ரோல் செய்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். படத்தை பார்த்த ரசிகர்கள் டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். இதற்கிடையே விஷ்ணு விஷால் தனது முதல் மனைவியான ரஜினியை விவாகரத்து செய்துவிட்டு ஸ்குவாஷ் ப்ளேயர் ஜுவாலா கட்டாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார்.

விஷ்ணு விஷால் பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "முதல் மனைவி ரஜினியை பிரிந்த பிறகு இரண்டாவது திருமணம் குறித்து யோசனையே எனக்கு இல்லை. இரண்டாவது திருமணம் நடக்க கண்டிப்பாக வாய்ப்பே இல்லை என்றுதான் நினைத்தேன். இன்னும் சொல்லப்போனால் ரஜினியை பிரிந்த பிறகு தனியாகத்தான் வாழ்க்கை கழியப்போகிறது என்றுதான் நான் நினைத்தேன்.

ஜுவாலா கட்டா: அந்தச் சமயத்தில்தான் ஜுவாலாவுடன் சந்திப்பு ஏற்பட்டது. அவர் ரொம்பவே பாசிட்டிவ்வான நபர். அவர்தான் என் மீது காதல் இருப்பதாக முதலில் தெரிவித்தார். அப்போது எனக்கு அதில் ஈடுபாடு இல்லாமல் இருந்தது. அந்த சமயத்தில் ஜுவாலாவிடம் நான், ஒருவேளை ஆர்யனுக்காக (விஷ்ணு விஷாலின் மகன்) மீண்டும் நான் எனது முதல் மனைவி ரஜினியிடம் பேசிவிட்டால் என்ன செய்வாய் என்ன கேட்டேன். அதற்கு அவரோ, எனது தலையெழுத்து என்று நினைத்துக்கொள்கிறேன் என்று சொன்னார்.

மனதில் பதிந்தது: அவர் அப்படி சொன்னது எனது மனதில் ரொம்பவே அழுத்தமாக பதிந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து ஜுவாலாவிடம் நான், இரண்டாவது திருமணம் குறித்த யோசனையே எனக்கு இல்லை. ஆர்யன் இருக்கிறார். அவனை பார்க்கும்போதெல்லாம் ஒரு மாதிரி இருக்கும் அதனால் வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு ஜுவாலாவோ நான் ரிஸ்க் எடுக்க தயார் என்று சொன்னார் பத்து வருடங்களுக்கு முன்பு ஜுவாலாவுக்கும் விவாகரத்து நடந்தது. அவருக்கு திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது. ஆனால் ஆர்யனை தவிர்த்து வேறு ஒரு குழந்தை வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.

நல்ல குணங்கள்: காலம் செல்ல செல்ல ஜுவாலாவின் நல்ல குணம் என்னை ஈர்த்தது. அதனையடுத்து அவரை திருமணம் செய்துகொண்டேன். பிறகு திருமணம் செய்துகொண்டேன். ஆர்யன் என்னிடமும் ஜுவாலாவிடமும் ரொம்பவே நெருக்கம். எனது முதல் மனைவி ரஜினியை பிரிய வேண்டும் என்று நான் முடிவெடுக்கவில்லை. நீதிபதி கேட்டபோதும்கூட நான் அமைதியாகத்தான் இருந்தேன். பிரிய வேண்டும் என்று ரஜினிதான் சொன்னார். அது எனக்கு ரொம்பவே வலியை கொடுத்தது.

நன்றாக வளர்த்திருக்கிறார்: ஆர்யனை ரஜினி நன்றாக வளர்த்திருக்கிறார். இப்போது நான், ஆர்யன், ஜுவாலா ரொம்பவே நெருக்கம். ரஜினியிடம் இன்னமும் நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அவரும் சந்தோஷமாக நன்றாகவே இருக்கிறார். வாழ்க்கையில் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் அனைத்துமே நடக்கிறது. இப்போது எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. அதை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X