மதுரைக்காரங்கன்னா விஸ்வாசமா இருப்போம் அப்பு: மதுரை பாஷை பேசும் அஜித்
Recommended Video

சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு ஐதராபாத்திலிருந்து மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மாணவர்களின் தக்ஷா ட்ரோன் குழுவினருக்கு உதவி செய்தார்.
இந்நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் ஐதராபாத் சென்றார். அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
தென் மாவட்டங்களை மையப்படுத்தி கதையமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித் மதுரை பாஷை பேசி நடித்துள்ளார். நானும் மதுரைக்காரன் என்று வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.
விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, கோவை சரளா, யோகி பாபு, ரமேஷ் திலக், இமான் அண்ணாச்சி என பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











