வெளியானது விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்: தல மாஸ், கிளாஸ் #ViswasamFirstLook
Recommended Video

சென்னை: அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 23ம் தேதி இரவு 3.40 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து வைரலாக்க அஜித் ரசிகர்கள் விடிய விடிய தூங்காமல் காத்துக் கொண்டிருந்தனர்.
விஸ்வாசம்
அறிவித்தபடி 3.40 மணிக்கு விஸ்வாசம் படத்தின் ஃப்ர்ஸ்ட லுக்கை வெளியிட்டனர். ஃபர்ஸ்ட் லுக்கில் அஜித் முறுக்கு மீசையுடன் மாஸாக இருக்கிறார். ஒரு தல சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலும், மற்றொரு தல பெப்பர் லுக்கிலும் உள்ளார்.
கொண்டாட்டம்
விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்கை பார்க்க திரையுலகினரும் விழித்திருந்த சம்பவம் நடந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸ் என்று திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.
பிரசன்னா
#ViswasamFirstLook டபுள் தல அதனால் டபுள் மாஸ் என்று ட்வீட்டியுள்ளார் நடிகர் பிரசன்னா
வாழ்த்து
விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் சிறப்பாக உள்ளதாக பாராட்டி வாழ்த்தியுள்ளார் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன்.
பொங்கல்
விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. படத்தை பார்க்க தல ரசிகர்கள் மரண வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











