இனி ஏமாற்றம் இல்லை.. 'விசுவாசம்' ஷூட்டிங் உறுதி.. ஐதராபாத் கிளம்பும் அஜித்!

By Vignesh Selvaraj

Recommended Video

ஆளில்லா விமானத்தை பறக்க வைக்கும் தல அஜித்- வீடியோ

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாகத் தள்ளிப்போய் தற்போது மே 7-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.

நவம்பர் மாதம் 'விசுவாசம்' படத்தின் அறிவிப்பு வெளியாகி, ஜனவரி மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிந்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Viswasam shooting on may 7 confirmed

ஆனால், திரைக்கதை பணிகள் முடிவடையாததாலும், படக்குழுவினர் கன்ஃபார்ம் ஆகாததாலும் ஷூட்டிங் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஹீரோயினாக நயன்தாரா, இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமானார்கள்.

பிப்ரவரி 24-ம் தேதி ஷூட்டிங் எனக் கூறப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் சினிமா ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டது. மார்ச் 16 முதல் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டதால் 'விசுவாசம்' ஷூட்டிங் தொடங்கப்படவேயில்லை. மே 4-ம் தேதி ஷூட்டிங் என தகவல் வெளியான நிலையில் அதுவும் நடக்கவில்லை.

படத்தை முடித்து தீபாவளிக்கு வெளியிடுவது சிரம் எனக் கூறப்படும் நிலையில், மே 7-ம் தேதி ஐதராபாத்தில் 'விசுவாசம்' ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. இதற்காக, இன்று அஜித் ஐதராபாத் புறப்பட்டுச் செல்கிறார். ஐதராபாத் ஷூட்டிங்குக்கு பிறகு மும்பையில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.

அஜித் படத்துக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட விஜய் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. ஆனால், விசுவாசம் படத்தைப் பற்றிய அப்டேட் எதையுமே சொல்லவில்லை என டைரக்டர் சிவா மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X