ஹீரோ .. ஹீரோ ..

By Staff

விவேக்கும் குத்தாட்டக் களத்தில் குதிக்கவுள்ளார்.

ரொம்ப நாட்களாகவே ஊறப்போட்டு வந்த ஹீரோ ஆசையை இப்போது சொல்லி அடிப்பேன் படத்தின் மூலம்தீர்த்து வருகிறார் நடிகர் விவேக். முன்னணியில் இருக்கும் பல கதாநாயகர்களை விட விவேக்கின் முகவெட்டுஎவ்வளவோ தேவலாம் என்பதால் தைரியமாக அவரை புக் செய்தார் இயக்குநர் ராம்கி.

இயக்குநரின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில் விவேக் கடுமையாக உழைத்து வருகிறார். அண்மையில்திருச்சியில் நடந்த படப்பிடிப்பில் டூப் இல்லாமல் பைக்கை வேகமாகத் திருப்ப முற்பட்டு விபத்திற்குள்ளானார்.

அந்த காயத்தில் இருந்து குணமடைந்ததும், இப்போது அடுத்து ஒரு சாகசத்துக்கு தயாராகி விட்டார். படத்தில்அவருக்கு ஜோடியாக சாயா சிங்கும், தேஜாஸ்ரீயும் நடிக்கிறார்கள்.

இருவரும் குத்தாட்டத்தில் நிபுணிகள். மன்மத ராசா மூலம் பரபரப்பு கிளப்பியவர் சாயாசிங். அதேபோல் ஒருபாடல் மூலம் ரசிகர்களை துள்ள வைத்து வருபவர் தேஜாஸ்ரீ. இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் என்றால்குத்தாட்டம் இல்லாமல் எடுத்தால் எப்படி? எனவே சொல்லி அடிப்பேன் படத்திலும் இவர்களை குத்தாட்டம் ஆடவிட இருக்கிறார்கள்.

இங்கேதான் பிரச்சினை வந்தது. இருவரும் குத்தாட்டம் ஆடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் ஹீரோ? இதுவரைகாமெடியில் மட்டும் செம குத்து குத்திய அனுபவம் விவேக், ஆட்டத்திலும் அடடா என்று சொல்ல வைக்கவேண்டும் அல்லவா?

சின்ன வயதில் பரதநாட்டியம் கற்றுக் கொண்டதை வைத்து, இதுவரை நடிகர்களுடன் அவ்வப்போது ஓரிருபாட்டுகளில் ஆடி வந்தார் விவேக். ஆனால் கதாநாயகனாக நடிக்கும்போது அது போதாதே? எனவேவிவேக்கிற்கு குத்தாட்ட பயிற்சி முகாம் ஏற்பாடு செய்துள்ளது இயக்குநர் தரப்பு.

விவேக்கும் படு விறுவிறுப்பாக டான்ஸ் கற்று வருகிறார். அதிவேகமாக, அதிபயங்கரமாக, விறுவிறுவெனசுழல்வது, ஆடிக் கொண்டே அப்படியே நிற்பது என பலவிதமாக விவேக்கை டிரெயின் செய்து வருகிறார்களாம்.

இதற்கிடையே படத்தில் ஒரு பாடலுக்காக மும்பை சென்று வந்துள்ளார்கள் இசையமைப்பாளர்கள் தேவாவும்,இயக்குநர் ராம்கியும். எதற்காம்? தான் பாடும் பாடல்களில் எல்லாம் தமிழைக் குற்றுயிராக்கிவரும் பாடகர் உதித்நாராயண் இப்போது தனது குரல் வேண்டும் என்றால் மும்பைக்கே வரச் சொல்கிறாராம்.

விலை கொடுத்து வெட்டி வேலை பார்ப்பதில் மன்னர்களான கோலிவுட்காரர்களும் மும்பைக்கு செல்ல தயாராகவேஇருக்கிறார்கள். அப்படிதான் தேவாவும், ராம்கியும் அங்கு சென்று உதித் குரலை பதிவு செய்துதிரும்பியிருக்கிறார்கள்.

டெயில்பீஸ்: சொல்லி அடிப்பேன் படத்தை அடுத்து பாரதி கண்ணனின் உதவியாளர் இயக்கும் ஒன்மோர்டைம்படத்திலும் விவேக் கதாநாயகனாக நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X