ஜெயம் ரவி பெயரை கடைசி நேரத்தில் மாற்ற இவங்க தான் காரணமா?.. மொட்டை மாடி பார்ட்டியை விளாசும் ஃபேன்ஸ்!

சென்னை: அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டு "கவிதையே தெரியுமா" என கயிற்றில் தொங்கிக் கொண்டே சதா படுக்கையறை மீது பாடி ஏகப்பட்ட இளம்பெண்களை 'ஜெயம்' படத்தில் கவர்ந்த நடிகர் ரவியை அந்த படத்தில் இருந்தே ரசிகர்கள் 'ஜெயம்' ரவி என்றே அழைத்து வருகின்றனர். சுமார் 22 ஆண்டுகள் ரசிகர்களும் சினிமா உலகமும் அழைத்து வந்த பெயரை திடீரென ரவி மாற்றக் காரணமே இந்த இருவர் தான் என தற்போது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வலம் வருகிறது.

விஜே சித்து, ஹர்ஷத் கான் இணைந்து மொட்ட மாடி பார்ட்டி எனும் செலிபிரிட்டி ஷோவை யூடியூபில் நடத்தி வருகின்றனர். பல சினிமா ஹீரோக்கள் அவர்களின் மொட்ட மாடி பார்ட்டியில் லுங்கியுடன் கலந்துக் கொண்டு ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டே தங்களின் புதிய படங்களை புரமோட் செய்து வருகின்றனர்.

jayam ravi kadhalikka neramillai

சமீபத்தில், அப்படி அங்கே சென்று சிக்கியவர் தான் நம்ம ஜெயம் ரவி. அந்த நிகழ்ச்சியில் விஜே சித்து வாய் விட்ட நிலையில் தான் மனுஷன் திடீரென தனது பெயரையே மாற்றுவதாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட காரணமாக அமைந்துவிட்டது என தற்போது ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து அடி பொளந்து வருகின்றனர்.

இன்னும் எதுக்கு ஜெயம் ரவி?: ஜெயம் படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டதே. இன்னமும் ஏன் ஜெயம் ரவின்னே பெயர் வைத்துக் கொண்டு சுத்திக்கிட்டு இருக்கீங்க. நேரமில்லை ரவி என பெயரை மாற்றிவிடலாமே என விஜே சித்து மொட்ட மாடி பார்ட்டியில் போகிற போக்கில் கலாய்த்ததன் விளைவுதான் காதலிக்க நேரமில்லை படம் வெளியாவதற்கு முன்னதாக தன்னை இனிமேல் யாரும் ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என்றும் ரவி அல்லது ரவி மோகன் என அழைத்தால் சந்தோஷப்படுவேன் என ஜெயம் ரவி சொல்ல முக்கிய காரணமே என நெட்டிசன்கள் அந்த மொட்ட மாடி பார்ட்டி வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

மனசு கஷ்டமாகிடுச்சு: தொடர்ந்து ஜெயம் ரவி சோலோவாக நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வியை தழுவி வரும் நிலையில், சமீபத்தில் அவர் தனது மனைவியையும் பிரிந்து விவாகரத்து செய்ய முடிவு செய்த நிலையில், படத்தின் புரமோஷனுக்காக சென்ற இடத்திலும் பாலு தேவர் கதையாக ஜெயம் ரவியிடம் வந்து விழுந்த சாட்டையடி கேள்வியால் அவரது மனசு ரொம்பவே கஷ்டமாகிடுச்சு என்றும் அதனால் தான் இப்படியொரு முடிவை மனுஷன் எடுத்துவிட்டார் என்றும் கூறுகின்றனர்.

விஜே சித்துவுக்கு சாபம்: நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட விஜே சித்து செலிபிரிட்டிக்கள் புரமோஷனுக்கு வந்தால் இப்படியா மொக்கை பண்ணி அவங்களை மனசு நோகும்படி செய்வீங்க என ஜெயம் ரவி ரசிகர்களும் விஜே சித்துவையும் ஹர்ஷத் கானையும் வாய்க்கு வந்தபடி திட்டி வருகின்றனர். காதலிக்க நேரமில்லை படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் ஒரு ஃபீல் குட் படமாக அந்த படம் மாறியுள்ளதாக விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், பெயரை மாற்றியதும் வெற்றி கிடைத்து விட்டதா? என்கிற தொனியிலும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X