ஒரு பாட்டு பாடுங்களேன்… தனுஷ் குரலுக்கு அதிகரிக்கும் மவுசு
நடிகராக இருந்தாலும், பாடல் எழுதி சொந்தக்குரலில் பாடி பிரபலமடைந்துள்ளார் தனுஷ்.
இவரது குரலுக்கு இளம் இசையமைப்பாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறதாம்.
பல திரைப்படங்களில் பாடியிருந்தாலும் தனுஷை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது 'கொலைவெறி' பாடல்தான். இதனைத் தொடர்ந்து பல படங்களில் சொந்தமாக பாடல்கள் எழுதி பாடி வருகிறார். அதில் சில பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. இதனால் இசையமைப்பாளர்கள் மத்தியில் அவருக்கு மவுசும் அதிகரித்து வருகிறது.

நய்யாண்டியில்
தனுஷ் நடிக்கும் படங்களில் அவருக்கு ஒரு பாடலாவது பாடும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தான் நடிக்கும் நய்யாண்டி படத்திலும் ஒரு பாடலைப் பாடி அசத்தியிருக்கிறார் தனுஷ். ஜிப்ரான் இசையில் அந்தப் பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிக்கா விட்டாலும்
அவர் நடிக்காவிட்டாலும்கூட, ஒரு பாடலில் பாடும்படி இசையமைப்பாளர்கள் அவரை அணுகி வருகின்றனர். இரண்டாம் உலகம் படத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சலில் குத்து
சிவகார்த்திக்கேயன் ஹீரோவாக நடித்த எதிர்நீச்சல் படத்தை தயாரித்தவர் தனுஷ். இதில் பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு குத்துப்பாட்டு பாடி, நயன்தாரா உடன் நடனமாடியுள்ளார்.

10க்கும் மேற்பட்ட
நாட்டு சரக்கு என்று பாட ஆரம்பித்த தனுஷ் ‘கொலை வெறியில்'ஹிட் அடித்தார். இதனால் பல இசையமைப்பாளர்கள் தனுஷ் குரலுக்கு வாய்ப்பு அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











