Vijay sethupathi: விஜய் சேதுபதி சார் ஒரு நாளைக்கு எத்தனை ஷிப்ட்?

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி ஓய்வில்லாமல் படங்களில் நடித்து வருகிறார்.வெல்வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து, ஷிப்ட் போட்டு நடித்து வருகிறார்.

அதனால், கிடைக்கும் இடைவெளி நேரத்தில் சாப்பாட்டு நேரம் என்றால் வீட்டுக்குத்தான் வந்துடறாராம்.

அவுட்டோர் ஷூட்டிங் அவ்வளவாக இல்லாததால், விறுவிறுவென்று ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்து வரும் விஜய் சேதுபதி அடுத்து 33 வது படத்துக்கு ஒப்பந்தம் ஆகி இருக்கார்.

நடிச்சதும் தெரியலை

நடிச்சதும் தெரியலை

விஜய் சேதுபதி நடிக்க வந்ததும் தெரியலை, அதற்குள் 33 வது படத்துக்கு ஒப்பந்தம் ஆனதும் தெரியலை. என்னதான் டெடிகேஷன் ஆர்டிஸ்ட்டாக இருந்தாலும், ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்துக்கு போவது என்பதில் விஜய் சேதுபதிக்கு உடன்பாடு இருந்ததில்லை.

படமும் வேண்டும்

படமும் வேண்டும்

அடுத்தடுத்து படங்களில் நடித்தால்தான் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் எனும் பழமொழிக்கு ஏற்ப பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார் விஜய் சேதுபதி. காரணம் அவர் சென்னையிலும், துபாயிலும் பணம் சம்பாதிக்க பட்ட கஷ்டம் அப்படி. அதனால், படமும் வேண்டும் பணமும் வேண்டும் என்கிற தனது கொள்கையின் படி, இப்போதும் பணமும், படங்களும் அவர் கைவசம்.

படம் படம்

படம் படம்

பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றுதான் சினிமா பக்கம் அவர் பார்வை திரும்பியது. ஆனால், முதலில் வாய்ப்பு கிடைச்சது சீரியலில் கெஸ்ட் ரோல் நடிக்கத்தான். அடுத்து குறும் படங்களில் நடித்தார்.இப்போ அவரது உயரத்தை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு பணம், படம், புகழ் என்று உச்சத்துக்கு போயிருக்கார்.

இலங்கை தமிழர்

இலங்கை தமிழர்

இப்போது 32 படங்களில் நடித்துள்ளார் என்கிற எண்ணிக்கையில் இருக்கும் விஜய் சேதுபதி அடுத்து ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்காததால் விஜய் சேதுபதி 33 என்கிற பெயர்தான் இப்போதைக்கு. இதில் இலங்கைத் தமிழராக விஜய் சேதுபதி நடிக்கிறாராம்.

இலங்கை தமிழர்கள்

இலங்கை தமிழர்கள்

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் படும் அவலங்களை படமாக எடுக்க உள்ளார்கள் என்றும், இதில் விஜய் சேதுபதி இலங்கை தமிழராக நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் கமல்ஹாசன் தெனாலி படத்தில் எப்படி இலங்கை தமிழ்பேசி நடித்தாரோ அப்படி நடிக்க உள்ள விஜய் சேதுபதி, முறையாக இலங்கை தமிழில் பேச பயிற்சி எடுத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X