அங்கிட்டு ஒல்லிக் குச்சி அதிதி.. இங்கிட்டு மெதுக் மெதுக் மஞ்சிமா.. விஜய் சேதுபதி டிபரன்டா இருக்காரே!

By Staff

Recommended Video

பட்டாசு வெடித்த ரசிகர்களை கண்டித்த விஜய்சேதுபதி | Vijay Sethupathi | Tughlaq Durbar Movie Pooja

சென்னை: முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் நடிக்காதே என்று சர்வதேச தமிழ் சமூக உணர்வாளர்கள் கொந்தளித்ததன் பலனாக, எதுக்குடா வீண் வம்பு? என்று அந்தப் ப்ராஜெக்டில் இருந்து பதறிச் சிதறி விலகிக் கொண்டார் விஜய் சேதுபதி.

இப்போது 'லாபம்' எனும் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழுக்கு வந்திருக்கிறார். விஜய் சேதுபதி, ஸ்ருதி காம்பினேஷன் எப்படி இருக்கப்போகிறது? என்பது ஒரு வித்தியாசமான ஃபீலிங்காக இருக்கிறது.

இந்த நிலையில் வி.சேதுபதியின் அடுத்த படமும் ஷூட்டுக்கு ரெடி. புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் 'துக்ளக் தர்பார்' எனும் கதையில் நடிக்கிறார் அண்ணன். டைட்டிலைப் பார்க்கும் போது அநேகமாக அரசியல் கதையாக இருக்கலாம்! என்று பேசப்படுகிறது.

அரசியல் சார்ந்த சமூகம்

அரசியல் சார்ந்த சமூகம்

அடிக்கடி சமூக பிரச்னைகள் குறித்து தனது கருத்தை மென்மையாகவும், பளிச்செனவும் பதிவு செய்வது வி.சே.வின் வழக்கம். அந்த அடிப்படையில் அரசியல் சார்ந்த சமூக கருத்தான படமாக இது இருக்கலாம்! என்கிறார்கள்.

2 நாயகிகள்

2 நாயகிகள்

இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் அதிதி ராவ், இன்னொருவர் மஞ்சிமா மோகன். அதிதியோ வடக்கத்திய ஒல்லிப் பிச்சான் பொண்ணு. ஆனால் மஞ்சிமாவோ கழுக் மொழுக் மலையாள கரையோரத்துப் பொண்ணு.

கேரளத்து மஞ்சிமா

கேரளத்து மஞ்சிமா

வடக்கத்தி அதிதி கூட மணிரத்னம் புண்ணியத்தில் ஓரளவு பெரிய லெவல் இளம் நடிகர்களுடன் நடித்துவிட்டார். (மணிக்கு எப்பவும் நார்த் இண்டியாதானே பெருசு! என்கிறீர்களா?) ஆனால் அடுத்த வீட்டு இளைஞி போல் இருக்கும் மஞ்சிமாவோ 'அச்சம் என்பது மடமையடா'வுக்குப் பின் பாவம் நல்ல பிரேக்கிற்காக போராடிக் கொண்டே இருக்கிறார்.

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இந்தப் படத்தில் இணைகிறார்கள் விஜய் சேதுபதியோடு. இந்த காம்பினேஷனை கேள்விப்பட்டு, ‘என்ன டேஸ்ட்டு விஜய் சேதுபதிக்கு! ஒரு பக்கம் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி அதிதிராவ். இன்னொரு பக்கம் மெதுக் மெதுக் மஞ்சிமா மோகன்" என்று பொங்கிக் கருகிக் கொண்டிருக்கிறதாம் கோடம்பாக்கம்.

ஹும், வேட்டி இருக்குறவர் தூக்கிக் கட்டுறார்! உங்களுக்கு என்ன பாஸு பொறாம?

- ஜி.தாமிரா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X