அஜித்தை கிண்டல் செய்த விஜய் ரசிகர்கள்.. ஏகே கொடுத்த செம ரிப்ளை.. நெத்தியடி பதிலா இருக்கே

சென்னை: அஜித் நடிப்பு, கார் ரேஸ் என இரட்டை குதிரையில் சவாரி செய்துவருகிறார். கடைசியாக அவர் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார். விரைவில் அந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் குறித்து இயக்குநர் சரண் ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

அஜித்குமார் கடந்த பல வருடங்களாக டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டும் நடித்துவந்த அவர் கடந்த வருடத்தில் மட்டும் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இரண்டு படங்களில் விடாமுயற்சி கைவிட்டுவிட்டது. அடுத்ததாகவும் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படம் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wait for My Next Film Ajith s Reply to Vijay Fans Revealed by Director Saran
Photo Credit:

கார் ரேஸில் பிஸி: இதற்கிடையே அவருக்கு கார் ரேஸில் அதீத ஆர்வம் என்பது அனைவருக்குமே தெரியும். அவரது கரியர் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நிலையில் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி சில விபத்துக்களை சந்தித்தார். அதன் காரணமாக அவரின் மார்க்கெட்டும் கொஞ்சம் தடுமாறியது. பிறகு சுதாரித்துக்கொண்ட அவர் சினிமாவில் மட்டும் கவனத்தை செலுத்தினார். தற்போது மீண்டும் கார் ரேஸில் அவரது கவனம் திரும்பியிருக்கிறது.

பந்தயம் அடிக்கும் அஜித்: அந்தவகையில் துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடந்த கார் ரேஸில் தனது ரேஸிங் டீமுடன் களமிறங்கி பந்தயம் அடித்தார். அவரது வெற்றி இந்தியாவில் கார் ரேஸ் மீதான ஆர்வம் இளைஞர்களுக்கு அதிகரிக்கும் என்ற நம்பிக்கை பலரிடமும் எழுந்திருக்கின்றது. இப்போது அவர் ஸ்பெயினில் முகாமிட்டிருக்கிறார். விரைவில் நடக்கவிருக்கும் ரேஸில் தனது டீமுடன் கலந்துகொள்ளவிருக்கிறார். இதிலும் ஏகே வெற்றி பெற்று கெத்து காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Also Read
விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஜனநாயகன் படத்தில் நடந்த ட்விஸ்ட்?.. என்ன ஆனது தெரியுமா?
விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஜனநாயகன் படத்தில் நடந்த ட்விஸ்ட்?.. என்ன ஆனது தெரியுமா?

விஜய் அரசியலில்; அஜித் ரேஸில்: ரஜினி - கமலுக்கு பிறகு திரைத்துறை சந்தித்த பெரிய போட்டிகளில் ஒன்று அஜித் - விஜய். இரண்டு பேரின் படங்களும் வெளியாகும்போது இருவரின் ரசிகர்களும் உச்சக்கட்ட உக்கிரத்தில் இருப்பார்கள். அதன் காரணமாக தியேட்டர் வாசல், சோஷியல் மீடியா என பல இடங்களில் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. ஒருவழியாக இந்தப் பிரச்னை இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொன்னால் நீங்கள் எப்போது வாழ்வீர்கள் என ஏகே கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சரண் பேட்டி: இந்நிலையில் அஜித்தை வைத்து காதல் மன்னன், அட்டகாசம், அமர்க்களம், அசல் உள்ளிட்ட படங்களை இயக்கிய சரண் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "அஜித் சார் கோட்டூர் புரத்தில் டென்னிஸ் ஆடுவார். அப்போது அவரை எதிர்த்து விளையாடுபவர்கள் விஜய் ரசிகர்களாக இருப்பார்கள். அவர்கள் அஜித்திடம், எங்கள் தளபதி போல் வருமா என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள். அதற்கு அஜித்தோ, எனது அடுத்த படம் வரட்டும் பாருங்க என பதிலளிப்பார். அவர்கள் கிண்டல் செய்வதை அஜித் பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X