விஜய் பற்றிய முக்கிய ரகசியம் தெரிய வேண்டுமா?
Recommended Video

சென்னை: விஜய் இன்றும் இளமையாக இருப்பதன் ரகசியம் தெரிய வந்துள்ளது.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்க்கு 44 வயதானாலும் இன்னும் 16 வயது பையன் போன்று துடிப்புடன் நடனம் ஆடுகிறார்.

அவர் டான்ஸ் ஆடும் வேகத்தை பார்த்து பிற ஹீரோக்களே வியக்கிறார்கள். மேலும் வயது மட்டும் தான் ஏறிக் கொண்டே போகிறதே தவிர அவர் இளமையாகவே உள்ளார்.
அந்த இளமைக்கான ரகசியத்தை விஜய் தெரிவித்துள்ளார். உடல்நலம் தான் முக்கிய சொத்தாக நினைக்கிறார் விஜய். தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வாராம்.
உணவே மருந்து என்பதை மனதில் வைத்து சாப்பிடுகிறாராம் விஜய். இரவு நேர உணவை 7 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிடுவாராம். தினமும் வாக்கிங், ஜாகிங் செல்கிறாராம்.
டயட்டுடன், உடற்பயிற்சி செய்வதே தனது இளமையின் ரகசியம் என்கிறார் விஜய்.


Click it and Unblock the Notifications











