அஜித்துக்கு சிவாவை ஏன் இவ்வளவு பிடித்திருக்கிறது தெரியுமா?

By Siva

Recommended Video

விஸ்வாசம் போஸ்டரில் அஜித், ரஜினி, விஜய்- வீடியோ

சென்னை: அஜித்திற்கு ஏன் இயக்குனர் சிவாவை பிடித்துள்ளது என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் பாடல் ஆசிரியர் விவேகா.

வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து நான்காவது முறையாக இயக்குனர் சிவாவும், அஜித்தும் சேர்ந்து பணியாற்றியுள்ள படம் விஸ்வாசம். விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

சிவாவிடம் அஜித்துக்கு அப்படி என்ன விஷயம் பிடித்ததோ அவர் இயக்கத்திலேயே தொடர்ந்து நடிக்கிறார் என்ற பேச்சு கிளம்பியது. இது குறித்து பாடல் ஆசிரியர் விவேகா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,

சிவா

சிவா

சிறுத்தை படத்தில் ஒரு பாடல் எழுதினேன். அதன் பிறகு வீரம் படத்தில் அனைத்து பாடல்களும், வேதாளத்தில் 2 பாடல்களும் எழுதினேன். தற்போது விஸ்வாசம் படத்தில் 3 பாடல்கள் எழுதியுள்ளேன். சிவா என்னிடம் விஸ்வாசம் படத்தின் கதையை கூறியதுமே இது மிகப்பெரிய வெற்றி பெறும் என்றேன். பாடல்கள் குறித்து விளக்கமாக பேச முடியாது.

விஸ்வாசம்

விஸ்வாசம்

விஸ்வாசம் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள படம். ஆனால் இது வீரம் போன்று இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். இமான் முதல் முறையாக அஜித் படத்திற்கு இசையமைத்துள்ளார். அதனால் அவர் தனது பாணியில் இருந்து விலகி புதிதாக இசையமைத்திருக்கிறார். அஜித் மாஸ் ஹீரோ என்பதால் பாடல்கள் மாஸ், கிளாஸ் கலவையாக இருக்கும்.

அஜித்

அஜித்

சிவா ரொம்ப நல்லவர். அவரை அனைவருக்கும் பிடிக்கும். சிறுத்தை படம் வெளியான நாட்களில் இருந்து தற்போது வரை அப்படியே உள்ளார். அதனால் தான் அஜித் சாருக்கும் அவரை பிடித்துள்ளது. பாடல்கள் எழுதுவதில் முழு சுதந்திரம் அளிப்பவர் சிவா. அவருக்கு தமிழ் மீது பற்று அதிகம். நல்ல பாடல்களை மனம் விட்டு பாராட்டுவார்.

பாராட்டு

பாராட்டு

பாடல் வரிகளில் அஜித் சார் தலையிடுவது இல்லை. வரிகளை கேட்ட பிறகு பாராட்டுவார். வீரம் மற்றும் வேதாளம் படங்களுக்காக என்னை பாராட்டியுள்ளார். வேதாளம் படத்தில் ஓபனிங் பாடலை படமாக்கியபோது நான் சென்றிருந்தேன். அங்கேயே என் பாடல் வரிகளை பாராட்டினார். விஸ்வாசம் படத்தின்போது அவரை நான் இதுவரை சந்திக்கவில்லை என்று விவேகா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X