பிரபாஸுக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை தெரியுமா?

By Siva

மும்பை: பிரபாஸுக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி.

பாகுபலி படக்குழுவை சேர்ந்த பிரபாஸ், ராணா மற்றும் எஸ். எஸ். ராஜமவுலி ஆகியோர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பிரபாஸ் பற்றிய சுவராஸ்யமான விஷயங்கள் தெரிய வந்தது.

பிரபாஸ்

பிரபாஸ்

பிரபாஸ் ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவர். நிஜ வாழ்க்கையில் ரொம்ப சோம்பேறி. திருமணம் செய்யக் கூட அவருக்கு சோம்பேறித்தனம். ஒரு பெண்ணை பார்த்து அவரின் பெற்றோருடன் பேச பிரபாஸுக்கு சோம்பேறித்தனம். அதனால் தான் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார் என்று ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

ராணா

ராணா

பிரபாஸ் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாலும் சேட்டைக்காரர். ரொம்ப சேட்டை செய்வார் ஆனால் சிக்கவே மாட்டார் என்று ராஜமவுலி கூறியுள்ளார். ஆமாம், நான் தான் சிக்குவேன் பிரபாஸ் இல்லை என்று ராணா இடைமறித்து பேசினார். பிரபாஸுக்கு உணவு என்றால் உயிராம்.

முக்கியம்

முக்கியம்

செக்ஸ், உணவு இதில் எது உங்களுக்கு முக்கியம் என்று கரண் பிரபாஸிடம் கேட்டார். அதற்கு பிரபாஸ் சோறு தான் முக்கியம் என்றார். அனுஷ்கா ஷெட்டியை காதலிக்கிறீர்களா என்று கரண் ஜோஹார் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், நான் அனுஷ்காவை காதலிக்கவில்லை. அவர் என் நல்ல நண்பர் அவ்வளவு தான் என்றார்.

தெலுங்கு மக்கள்

தெலுங்கு மக்கள்

பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியானபோது வட இந்தியா மற்றும் தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்தபோதிலும் முதலில் தெலுங்கு ரசிகர்களுக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் வேறு எதையோ எதிர்பார்த்தார்கள் போன்று. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தான் அவர்கள் ஆதரவளித்தார்கள் என்றார் ராஜமவுலி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X