கூலியை இந்த விஷயத்தில் முந்த முடிவெடுத்த வார் 2.. அடுத்த வாரமே ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட் வருது!

சென்னை: வரும் ஆகஸ்ட் மாதம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே மிரள வைக்க 2 பெரிய படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. ஒன்று அனைவருக்கும் தெரிந்த நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் தான். இன்னொரு படம் அந்த படத்துக்குப் போட்டியாக பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டோலிவுட் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள வார் 2 திரைப்படம் தான்.

இந்தி, தெலுங்கு மற்றும் ஓவர்சீஸ் மார்க்கெட்டை கூலியை விட அதிகம் குறிவைக்கும் முடிவில் ஏகப்பட்ட வேலைகளை வார் 2 படக்குழு செய்து வருகிறது. இந்த 2 படங்களில் உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் போட்டியும் நடைபெறும் என்பது தெளிவாகவே தெரிகிறது.

War 2 trailer will release next week on surpasses Coolie
Photo Credit:

இந்நிலையில், கூலி படத்துக்கு முன்பாக சூப்பரான சம்பவத்தை வார் 2 படக்குழு அடுத்த வாரமே செய்யவுள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏதாவது அப்டேட் வெளியிடுமா என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

வார் 2 டிரைலர் வருது: யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள வார் 2 திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. சுதந்திர தினத்தை குறிவைத்து பாலிவுட்டில் வெளியாகும் இந்தி படங்கள் எல்லாம் இதுவரை மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவித்துள்ளன. இந்நிலையில், அடுத்த வாரம் ஜூலை 23ம் தேதி மாலை 6 மணிக்கு வார் 2 படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் காரணமாக இந்தியளவில் #WAR2Trailer டிரெண்டாகி வருகிறது.

அடுத்த மாசம் தான் கூலி டிரைலர்: கூலி படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்துக்கு குறைவாகவே உள்ள நிலையில், இதுவரை படத்தின் டீசர் மற்றும் டிரைலர் எதுவுமே வெளியாகவில்லை. அதே போல இசை வெளியீட்டு விழா, மற்ற மாநிலங்களுக்குச் சென்று புரமோஷன் செய்வது என எதையுமே தொடங்காமல் சன் பிக்சர்ஸ் அமைதியாக உள்ளது. அடுத்த மாசம் ஆகஸ்ட் 2ம் தேதி டிரைலர் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இசை வெளியீட்டு விழாவும் அன்றைய தினத்திலேயே நடைபெறும் என்றும் இந்த மாத இறுதியில் அனிருத் இசைக் கச்சேரிகளில் பிசியாக இருக்கும் நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவும் தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது.

War 2 trailer will release next week on surpasses Coolie
Photo Credit:

1000 கோடிக்கு வாய்ப்பு இருக்கா?: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா நடித்துள்ள கூலி படம் வார் 2 படத்துடன் மோத உள்ள நிலையில், பல இடங்களில் பாக்ஸ் ஆபீஸ் போட்டி கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது. கர்நாடகாவில் குறைவான விலைக்கு டிக்கெட் விற்க வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கூலி படத்தின் வசூலை பெருமளவில் குறைக்கும் என்கின்றனர். அதிகபட்சமாக ஜெயிலர், லியோ செய்தது போல 600 கோடி வசூல் வந்தாலே பெரிய விஷயம் தான் என கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Read more about: coolie rajinikanth கூலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X