சூப்பர்ஸ்டார் படத்தைப் பார்ப்பது எங்கள் குடும்பத்திற்கே திருவிழா : தனுஷ்
சென்னை : சூப்பர்ஸ்டாரின் படத்தைப் பார்ப்பது என்பது எங்கள் குடும்பத்திற்கு திருவிழா போன்றது எனத் தெரிவித்துள்ளார் ரஜினியின் மருமகனும், தேசிய விருது வாங்கிய நடிகருமான தனுஷ்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தயாரான லிங்கா படம் நேற்று முன்தினம் ரிலீசானது. சுமார் நான்காண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் நடிப்பில் ரிலீசாகும் நேரடிப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடந்தது.
ரஜினியின் பிறந்ததினமான 12ம் தேதி இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விடுமுறை...
முன்னதாகவே தனது மாமனாரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினியின் படத்தை ரிலீஸ் நாளில் பார்க்க வேண்டும் என தனது இயக்குநரிடம் விடுமுறை வாங்கி சென்னை வந்தார் தனுஷ்.

மகிழ்ச்சி...
திட்டமிட்டபடி, லிங்கா ரிலீஸ் தினத்தன்று தன் குடும்பத்தாரோடு லிங்காவைத் தரிசிக்க சென்றார் தனுஷ். லிங்காவிற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பால் ரஜினி குடும்பத்தார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

லிங்கா டி-சர்ட்...
சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் லிங்கா படத்தை தனது குடும்பத்தாருடன் அமர்ந்து பார்த்தார் தனுஷ். அப்போது லிங்கா என எழுதப்பட்டிருந்த டி-சர்ட்டை அவர் அணிந்திருந்தார்.

திருவிழா...
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ், ‘சூப்பர்ஸ்டாரின் படத்தைப் பார்ப்பது என்பது எங்கள் குடும்பத்திற்கு திருவிழா போன்றது' என்றார். மேலும், ரஜினி விலைமதிப்பில்லாதவர், அபூர்வமானவர் என தனுஷ் பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











