எனக்கு ஜுவாலாவை பிடிக்கும், அவருக்கு என்னை பிடிக்கும்: விஷ்ணு விஷால்
Recommended Video
சென்னை: எங்களுக்கு ஒருவரையொருவர் பிடிக்கும் என்று ஜுவாலா கட்டா பற்றி நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த மனைவி ரஜினி நட்ராஜை கடந்த ஆண்டு பிரிந்தார். கோலிவுட்டில் அழகுத் தம்பதியாக இருந்த அவர்கள் விவாகரத்து பெற்றது ரசிகர்களை மட்டும் அல்ல பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார்.

விஷ்ணு
ஜுவாலா கட்டா, விஷ்ணு விஷால் செல்ஃபிக்களை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் இஷ்டத்திற்கு பேசத் துவங்கிவிட்டனர். இந்த பெண்ணை தான் திருமணம் செய்யப் போகிறீர்களா, இவருக்காகத் தான் ரஜினியை பிரிந்தீர்களா, இது நியாயமே இல்லை என்று சிலரும், சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருங்க என்று சிலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

விளக்கம்
விஷ்ணு விஷால் செல்ஃபியை வெளியிட்டாலும் வெளியிட்டார் ட்விட்டரில் அது பற்றி தான் பேச்சாக கிடந்தது. இந்நிலையில் அந்த செல்ஃபி விவகாரம் குறித்து விஷ்ணு விஷால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ஜுவாலாவுக்கும், தனக்கும் இடையே என்ன உள்ளது என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

நட்பு
எனக்கு ஜுவாலாவை பிடிக்கும். அதே போன்று அவருக்கும் என்னை பிடிக்கும். எனக்கு ஜுவாலாவை ஓராண்டு காலமாக தெரியும். இருவருக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். அதனால் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி நேரம் செலவிடுவோம் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

சினிமா
நானும், ஜுவாலாவும் காதலிக்கிறோமோ என்றால் எங்களுக்கு ஒருவரையொருவர் பிடிக்கும். அதை தாண்டி தற்போதைக்கு எதையும் சொல்ல முடியாது. நாங்கள் இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாக இருப்பதால் காதலுக்கு நேரம் இல்லை எனலாம் என்கிறார் விஷ்ணு விஷால். ரஜினியும், விஷ்ணு விஷாலும் பிரிந்துவிட்டாலும் மகன் ஆர்யனுக்காக நட்பாக உள்ளனர். விஷ்ணு விஷாலுக்கு மகன் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











