ஒரு பிஸ்கோத்து விளம்பரத்துக்கு ரூ.12 கோடி வாங்கிய நடிகர்
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் பிஸ்கட் விளம்பரம் ஒன்றில் நடிக்க ரூ,12 கோடி வாங்கியுள்ளாராம்.
பாலிவுட் பிரபலங்கள் விளம்பர படங்களில் நடிக்க கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். சொல்லப் போனால் சிலர் படங்களை விட விளம்பரப் படங்களில் நடித்து அதிகம் சம்பாதிக்கின்றனர்.
இந்நிலையில் இளம் ஹீரோ ரன்பிர் கபூரும் ஒரு விளம்பரத்தில் நடிக்க பெரிய்ய்ய தொகையை சம்பளமாக வாங்கியுள்ளார்.

பிஸ்கட் விளம்பரம்
பிஸ்கட் கம்பெனி ஒன்று தங்களது விளம்பர படத்தில் குறும்புத்தனமான நடிகரை நடிக்க வைக்க நினைத்தது. அப்போது அவர்களின் நினைவுக்கு வந்தவர் ரன்பிர் கபூர்.

ரூ.12 கோடி
ரன்பிரை அணுகிய நிறுவனம் தங்களது விளம்பரத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளது. அதற்கு ரன்பிர் ரூ.12 கோடி கொடுத்தால் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சம்மதித்த கம்பெனி
ரன்பிர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதும் அந்த நிறுவனம் மறுபேச்சு பேசாமல் அந்த தொகையை அவருக்கு வழங்கியுள்ளது.

படங்களுக்கு
பர்ஃபி, யே ஜவானி ஹை திவானி பட வெற்றியை அடுத்து ரன்பிர் தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்திவிட்டார். தற்போது பாலிவுட்டில் ரன்பிர், கத்ரீனா கைஃப் காதல் பற்றி தான் பரபரப்பாக பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











