விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு அஜித் என்ன சொன்னார் தெரியுமா?

By Siva

Recommended Video

விஸ்வாசம் படத்தை பார்த்த அஜித் | பிரச்சினையில் சிக்கிய ஜீவா- வீடியோ

சென்னை: விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு அஜித் என்ன சொன்னார் என்பது தெரிய வந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது. அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் திருவிழா கொண்டாட்டத்தை ஏற்கனவே துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் படம் குறித்து சிவா பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

அஜித்

அஜித்

விஸ்வாசம் படம் சிறப்பாக வந்துள்ளதாக அஜித் சார் திருப்தி அடைந்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு நாம் ஒன்றாக வேலை செய்த நான்கு படங்களில் இது தான் சிறந்தது என்றார் அஜித் சார். இதை அவர் அனைவர் முன்பும் சத்தமாக கூறினார். அதனால் தான் நான் தற்போது தெரிவிக்கிறேன். ஒரு பெரிய நடிகரான அஜித் சார் இப்படி கூறியது எனக்கு உற்சாகம் அளித்துள்ளது.

குடும்பம்

குடும்பம்

விஸ்வாசத்தில் அரசியல் எதுவும் இல்லை. இது குடும்பத்துடன் பார்க்கும் படம். பேட்ட படத்துடன் விஸ்வாசம் மோதவில்லை. இரண்டு படங்களும் ஒன்றாக வருகின்றன. இரண்டுமே பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம். இங்கு மோதல், போட்டி எல்லாம் இல்லை. அஜித் சாரும் அப்படித் தான் நினைக்கிறார்.

மோதல்

மோதல்

பொங்கல் ரிலீஸ் தொடர்பாக ரசிகர்கள் யாரும் மோதிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இரண்டு படங்களையுமே ரசிகர்கள் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடினால் தான் சந்தோஷமாக இருக்கும். மோதல் தேவையில்லாதது.

வரம்

வரம்

அஜித் சாரை வைத்து 4 படங்கள் எடுத்துவிட்டேன். 5வது முறையாக மீண்டும் சேர்ந்து வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அது வரம். விஸ்வாசம் செட்டிலும் அஜித் சார் பிரியாணி சமைத்து தன் கையாலேயை பரிமாறினார். 250 பேருக்கு பிரியாணி சமைத்துக் கொடுத்தார் அவர் என்கிறார் சிவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X