ஆன்ட்ரியாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது: சொல்கிறார் அனிருத்
சென்னை: ஆன்ட்ரியாவிடம் தனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உறவினரான அனிருத் ஐஸ்வர்யா தனுஷின் 3 படம் மூலம் இசையமைப்பாளர் ஆனார். முதல் படத்தில் அவர் இசையமைத்த ஒய் திஸ் கொலெவறி பாடல் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
இந்நிலையில் அவர் ஐஸ்வர்யா தனுஷ், நடிகை ஸ்ருதி ஹாஸன், நடிகை ஆன்ட்ரியா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி பற்றி மனம் திறந்துள்ளார்.

ஐஸ்வர்யா
3 போன்ற ஒரு படத்தை முதல் படமாக எடுக்க ஐஸ்வர்யா தனுஷ் நிஜமாகவே தில்லானவர் தான் என்று அனிருத் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா இயக்கி வரும் வை ராஜா வை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதி ஹாஸன்
3 பட நாயகி ஸ்ருதி ஹாஸன் பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர் என்றார் அனிருத். (3 படத்திற்கு பிறகு ஸ்ருதி இதுவரை எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.)

ஆன்ட்ரியா
பல ஸ்டைல்களில் பாடுவது தான் ஆன்ட்ரியாவிடம் என்னை மிகவும் கவர்ந்த விஷயம். வணக்கம் சென்னை படத்தில் வரும் எங்கடி பொறந்த பாடலுக்கு நானும், ஆன்ட்ரியாவும் பாட வேண்டும் என்று இயக்குனர் கிருத்திகா உதயநிதி விரும்பினார். கிருத்திகா மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர் என்று அனிருத் கூறினார்.

பார்க்காமலேயே
எங்கடி பொறந்த பாடலை பதிவு செய்யும்போது நான் ஆன்ட்ரியாவை சந்திக்கவே இல்லை. அப்போது நான் மும்பையில் இருந்தேன். ஆன்ட்ரியா வந்து ஸ்டுடியோவில் அவர் பகுதியை மட்டும் பாடிவிட்டு சென்றார் என்று அனிருத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











