மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்: அட ரஜினி, கமல் மாதிரியே பேசிய சல்மான் கான்
மும்பை: கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஹாட்ஸ் ஆஃப் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடி பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
என்னிடம் 4 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் 6 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. மோடி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டபோது தான் ஹாங்காங்கில் இருந்தேன். பரவாயில்லை அடுத்த 2 அல்லது 3 நாட்களில் வங்கிக்கு சென்று பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்கிறேன்.
மோடியின் நடவடிக்கை அருமையானது. ஹாட்ஸ் ஆஃப் மோடிஜி. கறுப்பு பணத்தை ஒழிக்கும் இந்த நடவடிக்கைக்காக மோடிக்கு சல்யூட் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











