Darbar- தர்பார் போஸ்டரை பார்த்து சிவகார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா?
Recommended Video

தர்பார் போஸ்டரை பார்த்த சிவகார்த்திகேயன், அட்லி ட்வீட் செய்துள்ளார்
சென்னை: தர்பார் போஸ்டரை பார்த்த சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் படத்திற்கு தர்பார் என்று பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

போஸ்டரை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தர்பார் பற்றி சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நான் நீண்ட காலமாக இந்த கூட்டணிக்காக தான் காத்திருந்தேன். மாஸ் தர்பாரில் தலைவர். முருகதாஸ் சார், அனிருத், நயன்தாரா, லைகா மற்றும் மொத்த படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











