twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்கார் கதை திருட்டு விவகாரம்: விஜய்யின் கெத்து பதில்

    By Siva
    |

    Recommended Video

    சர்கார் கதை திருட்டு விவகாரம், பாக்யராஜிடம் விஜய் என்ன சொன்னார் தெரியுமா?- வீடியோ

    சென்னை: சர்கார் கதை திருட்டு பிரச்சனை குறித்து விஜய் என்ன தெரிவித்தார் என்பது தெரிய வந்துள்ளது.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

    புகார் தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் அது தன் கதை என்பதையும் நிரூபித்துள்ளார்.

    [மீண்டும் வேலையை காட்டிய ஏமி: ஷங்கர் பாவம் சொல்லி சொல்லி ஓய்ந்துவிட்டார்]

    சர்கார்

    சர்கார்

    சர்கார் கதை வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையில் இருந்து திருடப்பட்டது என்று எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். செங்கோல் கதையில் இருந்து 95 சதவீதம் திருடப்பட்டதாக பாக்யராஜ் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாக்யராஜ் விஜய்க்கு போன் செய்து பேசியுள்ளார்.

    விஜய்

    விஜய்

    சர்கார் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக நான் விஜய்க்கு போன் செய்து பேசினேன். செய்திகளில் பார்த்து தான் இது குறித்து தனக்கு தெரிய வந்ததாக அவர் என்னிடம் கூறினார். தர்மசங்கடமான ஃபீலிங்ஸ் எதுவும் இல்லாமல் உங்கள் வேலையை நீங்கள் செய்ங்க சார், முருகதாஸ் இதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வார் என்றார் என பாக்யராஜ் கூறியுள்ளார்.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    சர்கார் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக வருண் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் சர்கார் கதை திருடப்பட்டது அல்ல என்று ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    சர்கார் கதை தன்னுடையது தான் என்பதை நிரூபிக்க முடியும் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார். நாளை என்ன தீர்ப்பு வருமோ என்று லைட்டா டென்ஷனில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். விஜய் படங்கள் ரிலீஸுக்கு முன்பு பிரச்சனைகளை சந்திப்பது வாடிக்கையாகிவிட்டது.

    English summary
    Vijay came to know about Sarkar story theft issue through news. He has asked Bhagyraj to do his job as director AR Murugadoss will face the issue in court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X