சிம்புவுக்கு பிறந்தநாள்...பிப்ரவரி 3ஆம் தேதி ரகிகர்களின் திட்டம் என்ன தெரியுமா ?
சென்னை: நடிகர் சிம்புவுக்கு நாளை மறுநாள் பிப்ரவரி 3 ஆம் தேதி பிறந்தநாள் . ஒவ்வொரு ஆண்டும் தன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிம்புவுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் ஒருபக்கமிருக்க சிம்பு ரசிகர்கள் சிம்புவை வைத்து போஸ்டர்களை வித்தியாசமாக டிசைன் செய்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஷேர் செய்து வருகின்றனர்.
சமீப காலமாகவே சிம்புவின் படங்கள் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ள படங்களாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக மாநாடு படம் வெளிவந்த பிறகு சிம்புவுடைய ரசிகர்களின் ஸ்கேல் மிகவும் உயர்ந்துள்ளது.

ரசிகர்களை வசியப்படுத்த
"பத்துதல" என்கின்ற படத்தில் மிகவும் மும்முரமாக தென்காசியில் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் உடன் வித்தியாசமான திரைக்கதை கொண்ட இந்த படத்தில் புது உத்திகளை கையாண்டு சிம்பு மீண்டும் தன் ரசிகர்களை வசியப்படுத்த தயாராகி வருகிறார்.கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு இருவரும் இணைந்து நடித்த பல காட்சிகள் சோஷியல் மீடியாவில் புகைப்படங்களாக மிகவும் அதிகம் பரவி வருகிறது.

டாக்டர் சிம்பு
இன்னொருபுறம் இந்தப் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. டாக்டர் பட்டம் வாங்கிய சிம்பு அதன் பிறகு எங்கும் அதைப்பற்றி பெரிதாக பேசவில்லை. அது மட்டும் அல்லாமல் டாக்டர் சிம்பு தன்னை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு, தனது கலைப் பயணத்தை எந்தவித காலதாமதமும் இன்றி ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்து வருகிறார்.

சிம்புவின் ஹிட் லிஸ்ட்
சிம்புவின் ரசிகர்கள் சிம்புவுடன் செல்ஃபி போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்த ஆண்டு 2022 சிம்புவுக்கு நிறைய படங்கள் வர இருக்கிறது. மாநாடு படம் எப்படி ஒரு பிளாக்பஸ்டர் படமாக மாறியதோ அதேபோல் சிம்புவின் ஹிட் லிஸ்ட் இந்த ஆண்டும் உயரம் என்று சினிமா வட்டாரங்கள் சொல்லிக்கொண்டு வருகின்றனர்.

கண்கலங்கி அழுத சிம்பு
இந்த காதலர் தினத்தன்று சிம்பு தனது திருமண வாழ்க்கை பற்றியும் திருமணத்திற்கு உண்டான திட்டங்கள் பற்றியும் அறிவிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர் மனதில் எழுந்துள்ளது. மாநாடு பட விழாவில் கண்கலங்கி அழுத சிம்புவுக்கு அவருடைய ரசிகர்கள் பெரிதும் ஆதரவு கொடுத்தனர். அவை எல்லாம் கடந்து இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் சிம்பு ரசிகர்கள் சந்தோஷத்திற்காக சென்னை வருவாரா அல்லது தென்காசியில் உள்ள தனது ரசிகர்களை மட்டுமே இந்த ஆண்டு சந்திப்பாரா என்பது இன்னமும் யாருக்கும் தெரியாத விஷயம்.

மாஸ்டர் பிளான்
சிம்புவின் ரசிகர் பட்டாளம் எப்படியாவது பிறந்தநாளன்று சிம்புவைப் பார்த்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகின்றனர். அந்த நாள் அன்று சென்னையில் இல்லாவிட்டால் தென்காசி அருகே சென்று விடலாம் என்று ஒரு மிகப்பெரிய மாஸ்டர் பிளான் பல மாநிலங்களில் பல ரசிகர்கள் செய்து வருகின்றனர். இந்த வருட பிறந்த நாளை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடுகிறாரா ? அல்லது கொரானா காலகட்டம் என்பதால் தனிமைப் படுத்திக் கொண்டு நெருங்கிய நண்பர்களுடன் குடும்பத்தாருடன் சிம்பு கொண்டாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











