கொடுத்த வாக்கை காற்றில் பறக்கவிட்ட ரஜினி: கியா ரே, அம்புட்டுத்தானா?
சென்னை: காலா இசை வெளியீட்டு விழாவின் போது கொடுத்த வாக்கை காற்றில் பறக்கவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
பேரன்கள் எடுத்த பிறகும் ரஜினி தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். அது அவர் இஷ்டம். ஆனால் அவர் மகள்களை விட வயதில் சிறியவர்களுடன் சேர்ந்து டூயட் பாடுகிறார்.
குறிப்பாக நண்பரின் மகளான சோனாக்ஷியுடன் அவர் ரொமான்ஸ் பண்ணியதை பார்த்தவர்கள் பல மாதிரியாக விமர்சித்தார்கள்.

ரஜினி
இனி தன் மகள்களை விட வயதில் சிறியவர்களுடன் டூயட் பாடுவது இல்லை என்று காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அறிவித்தார். தலைவர் வயசுக்கு ஏற்ற மாதிரி தன்மையாக பேசியுள்ளார் என்று ரசிகர்கள் பெருமை அடைந்தனர். சொல்வதை தான் செய்வேன், செய்வதை தான் சொல்வேன் என்று கூறும் ரஜினி தான் கொடுத்த வாக்கை காற்றில் பறக்கவிட்டுள்ளார்.

மாளவிகா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் சீனியர்களான சிம்ரன், த்ரிஷா ஆகியோர் உள்ளனர். ஆனால் ரஜினியின் மகள்களை விட சின்னவரான மாளவிகா மோகனன் அவருக்கு ஜோடியாம். சிம்ரன் பிளாஷ்ஃபேக்கில் மட்டுமே வருகிறாராம். த்ரிஷாவின் கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

பாடல்
மாளவிகா மோகனன் ரஜினி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படக்குழு அடுத்த மாதம் ஐரோப்பா செல்கிறது. அங்கு மாளவிகா, ரஜினி டூயட் பாடலை படமாக்குகிறார்களாம். ரஜினி கொடுத்த வாக்கை காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்தால் மீண்டும் கொழந்தப்புள்ளையுடன் டூயட் பாடப் போகிறாரே என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

விமர்சனம்
கட்சி துவங்கும் முன்பு ரஜினி வெளியிட்டுள்ள விதிமுறைகளை பார்த்தவர்கள் வாவ், அருமை என்று அவரை பாராட்டியுள்ளார்கள். அதே சமயம் அவர் மாளவிகாவுடன் டூயட் பாடப் போவது குறித்து அறிந்து என்ன கொடுமை சார் இது என்று நொந்துள்ளனர். இதற்கு கார்த்திக் சுப்புராஜ் என்ன விளக்கம் வைத்திருக்கின்றார் என்று தெரியவில்லையே.


Click it and Unblock the Notifications











