twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட்லி அலுவலகத்திற்கு சென்ற ஷாருக்கான்: விஜய் ரசிகர்கள் சந்தேகப்பட்டது சரிதானோ?

    By Siva
    |

    Recommended Video

    தர்பார் போஸ்டரை பார்த்த சிவகார்த்திகேயன், அட்லி ட்வீட் செய்துள்ளார்

    சென்னை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அட்லியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டியின்போது ஸ்டேடியத்தில் இயக்குநர் அட்லி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அருகே அமர்ந்திருந்தார்.

    அதை பார்த்தபோதே விஜய் ரசிகர்களுக்கு லைட்டா சந்தேகம் வந்தது.

     தளபதி 63

    தளபதி 63

    தளபதி 63 படத்தில் ஷாருக்கான் கவுரவத் தோற்றத்தில் நடிக்கக்கூடும் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டேடியத்தில் அட்லியை ஷாருக்கான் அருகே பார்த்த விஜய் ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

     அட்லி

    அட்லி

    நேற்றைய ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான் அட்லியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அவர் அங்கிருந்து கிளம்பியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.

    தப்பு, அட்லியின் நிறத்தை கிண்டல் செய்வது ரொம்பத் தப்புதப்பு, அட்லியின் நிறத்தை கிண்டல் செய்வது ரொம்பத் தப்பு

     விஜய்

    விஜய்

    ஷாருக்கான் அட்லியின் அலுவலகத்திற்கு சென்றதால் அவர் தளபதி 63 படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அட்லி அறிவிப்பு வெளியிடும் வரை பொறுத்திருப்போம்.

     கோலிவுட்

    கோலிவுட்

    தளபதி 63 படத்தில் நடிக்குமாறு அட்லி கேட்டிருந்தால் ஷாருக்கான் நிச்சயம் சம்மதம் தெரிவித்திருப்பார் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் உயர்ந்த மனிதன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஷாருக்கானும் தமிழ் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்.

    English summary
    Bollywood actor Shah Rukh Khan has visited director Atlee's office last night after the IPL match.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X