»   »  கபாலிக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு? லாப பங்கு எவ்வளவு?

கபாலிக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு? லாப பங்கு எவ்வளவு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்திற்காக ரஜினிகாந்த் ரூ. 50 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் கடந்த மாதம் 22ம் தேதி ரிலீஸானது. படம் ரிலீஸான அன்றே ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்று கூறப்பட்டது. மேலும் வசூலில் கபாலி பல சாதனைகளை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

What is Rajini's compensation for Kabali?

கபாலி பட வசூலால் ரஜினி மகிழ்ச்சியில் உள்ளார். கபாலி வசூலால் ரஜினிக்கு கண்திருஷ்டி ஏற்பட்டதாகக் கூறி அவரது ரசிகர்கள் கிடா வெட்டி திருஷ்டி கழித்தனர். தலைவரின் படம் ஹிட்டான மகிழ்ச்சியில் இருந்தாலும் அவர் இந்த படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பதை தெரிந்து கொள்வதிலும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

கபாலி படத்திற்காக ரஜினி ரூ.50 கோடி சம்பளம் வாங்கினாராம். படம் வசூலில் பல சாதனைகள் படைத்துள்ளபோதிலும் அவர் லாபத்தில் பங்கு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோர் படத்தின் லாபத்தில் பங்கு வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
It is reported that Rajinikanth has got Rs. 50 crore as compensation for Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil