பர்ஸ்ட்டு பாட்ஷா... இப்ப படையப்பா... அப்ப நெக்ஸ்ட்டு கபாலியா காலாவா!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக வெளியான தகவல் தவறானது என தெரியவந்துள்ளது.

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் படத்தை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக வெளியான தகவல் தவறானது என தெரியவந்துள்ளது.

எந்திரன் பட வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்துள்ளார் ரஜினி. இப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தனது வெற்றி படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதை ரஜினி தவிர்த்து வந்தார்.

What is Rajinis next?

அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரும் வெற்றி படமான பாட்ஷாவின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்த சுரேஷ் கிருஷ்ணாவின் ஆசையை கூட அவர் நிராகரித்தார். ஆனால் 2.0 படத்தில் நடிக்க ரஜினி சம்மதம் தெரிவித்தார். இப்படம் எந்திரனின் அப்டேட்டட் வெர்ஷனாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான காலா, கபாலி உள்ளிட்ட படங்களில் ரஜினி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மாஸ் காட்சிகள் இல்லை என்ற விமர்சனம் பரவலாக இருந்தது. அந்த குறை கார்த்திக் சுப்புராஜ் படத்தின் மூலம் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க ரஜினி அடுத்ததாக படையப்பா இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இது தவறான தகவல் என ரஜினி தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு பேச்சே இல்லை எனவும், சில ஊடகங்கள் தங்களுடைய சுயநலத்துக்காக இது போன்ற தகவல்களை பரப்பி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இதேபோல் பாட்ஷா இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிப்பதாக ஒரு செய்தி வைரலானது. இதனால் விரைவில் ரஜினி கபாலி அல்லது காலா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்ற செய்தியும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X