விஷால் பிலிம் பேக்டரி துவங்க கோபம் தான் காரணம்: விஷால்
சென்னை: விஷால் பிலிம் பேக்டரி துவங்க கோபம் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
உதவி இயக்குனராக இருந்த விஷால் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்நிலையில் அவர் விஷால் பிலிம் பேக்டரியை துவங்கி தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.
தீபாவளிக்கு ரிலீஸான பாண்டிய நாடு படம் நன்றாக ஓடுவதால் மகிழ்ச்சியில் உள்ளார் விஷால்.

கோபம்
விஷால் பிலிம் பேக்டரி துவங்குவதற்கு என்ன காரணம் என்று விஷாலிடம் கேட்டதற்கு, கோபம் தாங்க காரணம் என்று சட்டென்று பதில் அளித்தார்.

போராடினேன்
அண்மையில் ஒரு படத்திற்காக போராடினேன். சென்சார் முதல் ஜெராக்ஸ் எடுப்பது வரை அனைத்து வேலையையும் இழுத்துப் போட்டு செய்தேன். அந்த படத்திற்காக நான் உழைத்தது, நேரம் செலவு செய்தது மற்றும் பிரச்சனைகளை சந்தித்தது ஆகியவை தான் விஷால் பிலிம் பேக்டரி துவங்க காரணம் என்றார் விஷால்.

புதுமுக இயக்குனர்கள்
என்னை வைத்து படம் எடுப்பதற்காக மட்டும் என்றால் நான் விஷால் பிலிம்ஸ் என்று பெயர் வைத்திருப்பேன். ஆனால் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று துவங்கப்பட்டதால் தான் விஷால் பிலிம் பேக்டரி என்று பெயர் வைத்தேன் என்று அவர் தெரிவித்தார்.

பிற ஹீரோக்களும்
விஷால் பிலிம் பேக்டரி மூலம் பிற ஹீரோக்களை வைத்து படம் தயாரிப்பேன் என்று கூலாக தெரிவித்தார் விஷால்.


Click it and Unblock the Notifications