ஓய்வு நேரத்தில் ரஜினி என்ன செய்கிறார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுவதும் குணமடைந்துவிட்டார். அதனால் பழையபடி படப்பிடிப்பில் பிஸியாகிறார். இந்நிலையில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் பழம்பெரும் நடிகர் சந்திர பாபுவின் பாடல்களை கேட்டு ரசிக்கிறார். இதற்காக அவர் பழைய பாடல்களை சேகரித்து வைத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் எப்ப வருவார், எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் வருவார் என்று சொல்வது போன்று அவரது ரசனைகளும் எப்ப மாறும் என்று யாருக்கும் தெரியாது.
ஒண்ணுமே புரியல உலகத்திலே, சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது போன்ற சந்திர பாபுவின் பாடல்கள் இன்றும் பலரைக் கவர்ந்துகொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரஜினியிடம் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தன்னை யார் சந்திக்க வந்தாலும் அவர்கள் கேட்கும் முன்பே அவர்களுடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறாராம். இதனால் அவரை சந்திக்கும் நபர்கள் சூப்பர்ஸ்டார், சூப்பர்ஸ்டார் தான் என்று மெச்சுகின்றனர்.


Click it and Unblock the Notifications