»   »  பீட்டா பெயர் போட்ட டி-சர்ட்டில் தனுஷ்: தீயாக பரவிய போட்டோ- உண்மை என்ன?

பீட்டா பெயர் போட்ட டி-சர்ட்டில் தனுஷ்: தீயாக பரவிய போட்டோ- உண்மை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் பீட்டா என்று எழுதப்பட்டுள்ள டிசர்ட் அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கும் என்று எதிர்பார்த்த தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்குவாதல் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது.

திரையுலகம்

திரையுலகம்

திரையுலகினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜல்லிக்கட்டு விஷயத்தில் மவுனமாக இருக்கின்றபோதிலும் நடிகர் தனுஷ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பின் பெயர்போட்ட டி சர்ட்டை அணிந்திருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

தர்மயோகி

தர்மயோகி

கொடி படத்தின் தெலுங்கு டப்பிங்கான தர்மயோகி படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது எடுத்த புகைப்படம் பீட்டா பெயர் போட்டு போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது.

வெறுப்பு

தனுஷ் மீது வெறுப்பில் உள்ளவர்கள் செய்த போட்டோஷாப்பிங் என்று அதிதி ரவீந்திரநாத் ட்வீட்டியதை தனுஷ் ரீட்வீட் செய்துள்ளார்.

English summary
A picture of Dhanush in PETA t-shirt is doing rounds on social media. The picture is nothing but a work of photoshopping.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos