அஜீத்துக்கு இன்று பிறந்தநாள்: நீங்கள் என்ன வாழ்த்தப் போகிறீர்கள்?

By Siva

சென்னை: ஒரு மெக்கானிக்காக தனது வாழ்க்கையை துவங்கி இன்று பெரிய நடிகராக இருக்கும் அஜீத் குமார் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ரசிகர்களால் 'தல' என்று கொண்டாடப்படும் அஜீத் குமார் ஒரு மெக்கானிக்காக தனது வாழ்க்கையை துவங்கினார். அதன் பிறகு தான் நடிக்க வந்தார். திரையுலகில் இருந்தாலும் தனக்கு பிடித்த பைக் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். திரையுலகப் பாதை அவருக்கு லேசானதாக இல்லை.

அவர் நடித்த முதல் படமான தெலுங்கு படம் ஒன்றின் இயக்குனர் மரணம் அடையவே அப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அவர் நடிப்பில் 1992ல் வெளிவந்த தெலுங்கு படம் பிரேம புஸ்தகம். அந்த படத்திற்கு பிறகு ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவருக்கு 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கண்டிப்பாக ஒன்றரை ஆண்டுகள் பெட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து அவர் தமிழ் படங்களில் நடிக்க முடிவு செய்தார்.

சப்போர்ட்டிங் ரோல்

சப்போர்ட்டிங் ரோல்

1995ம் ஆண்டு வரை அஜீத் தமிழ் படங்களில் சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஆசையால் பிரபலமான அஜீத்

ஆசையால் பிரபலமான அஜீத்

வசந்த் இயக்கத்தில் அஜீத் நடித்த ஆசை படம் அவரை ஒரு ஹீரோவாக உயர்த்தியது.

காதல் கோட்டை

காதல் கோட்டை

தேசிய விருது வாங்கிய காதல் கோட்டை படம் அஜீத்துக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. 1999ம் ஆண்டுக்கு பிறகு அவர் பெரிய ஹீரோவானார். வாலி, முகவரி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய ஹிட் படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.

'தல' ஆன அஜீத்

'தல' ஆன அஜீத்

முருகதாஸ் இயக்கத்தில் தீனா படத்தில் நடித்த போது அஜீத் குமார் 'தல' ஆனார். அதில் இருந்து அவரை ரசிகர்கள் 'தல' என்றே அழைக்கின்றனர்.

அட்டகாசம்

அட்டகாசம்

2003ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ரிலீஸான 5 படங்களில் அட்டகாசம் மட்டுமே ஹிட் ஆனது.

வரலாறு

வரலாறு

தோல்வியை கண்டு துவளாமல் 2006ல் கே.எஸ். ரவிக்குமாரின் வரலாறு மூலம் தன் நடிப்பை பிறர் பாராட்டும்படி செய்தார் அஜீத். அஜீத்தின் திரையுலக பயணம் அவ்வளவு தான் என்று நினைத்தவர்களை வரலாறு மூலம் வாயடைக்க வைத்தார்.

பில்லா, மங்காத்தா

பில்லா, மங்காத்தா

அதன் பிறகு பில்லா, மங்காத்தா ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த அவர் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

அஜீத் குமார் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை வாழ்த்த விரும்பும் ரசிகர்கள் கமெண்ட் பாக்சில் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X